தற்போது இலங்கைக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைக்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை பற்றியும் விராட் கோலி பேசினார். ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்னும் சந்தேகத்தையும் அவர் தீர்த்தார். நான் ஒருநாள் தொடரில் இருப்பேன் மற்றும் நான் இருக்க மாட்டேன் என்ற தகவல்கள் எங்கிருந்து வருகின்றது என அவருக்கே தெரியவில்லை என்று கூறுகிறார்.
போட்டிக்கு முன்பு சில பேட்டிகள்:
மைதானத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல், ஏதாவது போட்டியில் விளையாடியதுண்டா?
அப்படி எதுவும் இல்லை. எங்கள் அணி போட்டிக்கு முன்னதாகவே அந்த மைதானத்தை பற்றி தெரிந்து விடுவார்கள். இதனால், அந்த மைதானத்திற்கு தகுந்தாற் போல் அணியை தேர்வு செய்வோம். போட்டிக்கு 8 – 10 மணி நேரம் முன்னதாகவே, மைதானத்தின் நிலைமையை பற்றி தெரிந்து கொள்வோம்.
வைட்வாஷ் செய்யும் முனைப்புடன் இருக்கீறீர்களா?
கண்டிப்பாக அதை பற்றி நினைக்க வில்லை. இது எங்களுக்கு இன்னொரு டெஸ்ட் போட்டி, இன்னொரு டெஸ்ட் வெற்றி என்று தான் நினைப்போம். எங்களுக்கு இது, இன்னொரு டெஸ்ட் போட்டி தான், இதில் கண்டிப்பாக வெற்றி பெற முயற்சி செய்வோம். எதிர்காலத்தை பற்றி நாங்கள் நினைக்கமாட்டோம்.
குல்தீப் யாதவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாருங்கள்… அவரிடம் பிடித்ததே அவருடைய நம்பிக்கை தான். ஒரு சிறந்த அணியுடன் விளையாடும் போது அவருடைய நம்பிக்கை எனக்கு பிடிக்கும். எந்த நிலைமையிலும், எந்த பீல்டிங் செட்டிங்கலயும், எந்த பேட்ஸ்மேனுக்கும் எதிராகவும் பந்துவீச அவர் பயப்படுவதில்லை. தர்மசாலாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், பந்தே சுழலாத பிட்சில் சிறப்பாக சுழற்றினார் குல்தீப் யாதவ். நாளை போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு உள்ளது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பீல்டிங் தான் பலமா?
ஆமாம். கண்டிப்பாக அதுதான் எங்கள் பலம். இன்னும் சில நாளில் இந்திய அணியை தேர்வு செய்ய நாங்கள் உட்கார போகிறோம். கண்டிப்பாக இதை பற்றி தான் பேசுவோம்.
அப்டினா நீங்க கண்டிப்பா விளையாடுவீங்களா?
கண்டிப்பா விளையாடுவேன். நான் விளையாட மாட்டேன் என்று யார் சொன்னது?
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதாக தகவல் வந்தது..
புரலையா? அது எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. நான் விளையாடக்கூடாதுனா, சொல்லிடுங்க, நான் விளையாடவில்லை.