வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி ஒப்பனராக இறங்க வாய்ப்பு

கதை என்ன?

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி ஜூன் 9ஆம் தேதி விளையாடுகிறது. டி20-யில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாகவே இருக்கும்.

மீண்டும் களமிறங்கும் கெய்ல் புயல்

என்னதான் 3-1 என்ற கணக்கில் இந்திய அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி பெற்றாலும், டி20 இல் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். இதில் முக்கிய செய்தி என்னவென்றால் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி ஆட்ட நாயகன் கிறிஸ் கெயில் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். உலக டி20 தொடர்களில் கிறிஸ் கெயில் ஒரு முக்கிய வீரர் ஆவர். டி20 தொடர்களில் இவர் அதிக சாதனைகளை படைத்தது உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.

புத்திசாலி கோலி

இந்திய அணிக்கு டி20 போட்டியில் பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி ரெடியாக இருக்கும் போது, இந்திய அணியும் சில புத்திசாலியான விஷயங்களை செய்ய உள்ளது.

நாளை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

முதலில், இந்திய அணியின் நடுவரிசையில் அதிரடி இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அடுத்து, ஒருநாள் தொடர்களில் ஷிகர் தவானுடன் தொடக்கவீரராக களமிறங்கிய அஜிங்க்யா ரஹானேவுக்கு அடித்து விளையாட தெரியாது என்பதால், ஷிகர் தவானுடன் இந்திய கேப்டன் விராட் கோலி இறங்குவார் என எதிர்பார்க்க படுகிறது. இது கண்டிப்பாக நல்ல விஷயம் தான், ஏனென்றால் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி தொடக்கவீரராய் சிறப்பாக விளையாடினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.