Cricket, India, Sri Lanka, Australia, Virat Kohli, ICC Rankings, Test Rankings

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டனை கீழே தள்ளிவிட்டு 5வது இடத்தை பிடித்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. கொல்கத்தாவில் நடந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்த பிறகு தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டது. பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் கீழே சென்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 104 ரன் அடித்தார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 94 ரன் அடித்து நல்ல தொடக்கம் தந்த ஷிகர் தவான் இரண்டு இடம் முன்னேறி 28வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் 8 இடங்கள் முன்னேறி 29வது இடத்தில் இருக்க, முகமது ஷமி ஒரு இடம் முன்னேறி 18வது இடத்தில் இருக்கிறார்.

Cricket, India, Sri Lanka, Australia, Virat Kohli, ICC Rankings, Test Rankings

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் இந்த தொடர் தொடங்குவதற்கு முன் 2வது இடத்தில் இருந்தார், இந்த டெஸ்ட் போட்டியில் அவர் ஒரே விக்கெட் கூட எடுக்கவில்லை, இதனால் 20 புள்ளிகள் குறைந்து மூன்றாவது இடத்திற்கு சென்றார். மீதம் உள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் மேலே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி தரப்பில், இந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் வென்றால், இங்கிலாந்து அணியை கீழே தள்ளிவிட்டு மேலே வருவார்கள். இந்த ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றால் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திற்கே செல்லும்.

Cricket, Ashes, Australia, England, Australia Squad
MIRPUR, BANGLADESH – AUGUST 29: Nathan Lyon of Australia holds up the ball after taking five wickets in the innings during day three of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 29, 2017 in Mirpur, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

அதே போல் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினால், இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு செல்ல, ஆஸ்திரேலிய அணி 6வது இடத்திற்கு சென்று விடும். இப்போது இந்திய அணி முதல் இடத்தில் இருக்க, இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்கா அணி உள்ளது.

பேட்ஸ்மேனுக்கான டெஸ்ட் தரவரிசை:

1. ஸ்டீவ் ஸ்மித்
2. ஜோ ரூட்
3. கேன் வில்லியம்சன்
4. செதேஸ்வர் புஜாரா
5. விராட் கோலி
6. டேவிட் வார்னர்
7. ஹசிம் ஆம்லா
8. லோகேஷ் ராகுல்
9. அசார் அலி
10. அலெஸ்டர் குக்

பந்து வீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசை:

1. ஜேம்ஸ் ஆண்டர்சன்
2. காகிஸோ ரபாடா
3. ரவீந்திர ஜடேஜா
4. ரவிச்சந்திரன் அஸ்வின்
5. ரங்கனா ஹெராத்
6. ஜோஷ் ஹெசலவுட்
7. நாதன் லியொன்
8. டேல் ஸ்டெய்ன்
9. நெய்ல் வாக்னர்
10. ஸ்டுவர்ட் ப்ரோடு

ஆல்-ரவுண்டர்க்கான டெஸ்ட் தரவரிசை:

1. ஷகிப் அல் ஹசன்
2. ரவீந்திர ஜடேஜா
3. பென் ஸ்டோக்ஸ்
4. ரவிச்சந்திரன் அஸ்வின்
5. மொயின் அலி

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *