தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்ற நிலையில்,இரண்டாவது போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது.
இந்த புனே போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரின் முடிவில் 230 ரன் மட்டுமே அடித்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தொடக்கத்தில் திணறி வந்தார்கள்.
அதன்பிறகு 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், இந்த போது ரோகித்-தவான் ஜோடி ஒரு சாதனையை படைத்தார்கள்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் ஓப்பனர்கலாக இருவரும் 3000 ரன்னைக் கடந்துள்ளதுனர். இதற்கு முன்னர் சச்சின்-கங்குலி , மற்றும் சச்சின் சேவாக் இணை மட்டுமே இந்திய அணிக்காக ஓப்பனர்களாக 3000 ரன்னைக் கடந்திருந்தனர்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக ரன் அடித்த இணைகளின் பட்டியல் :
சச்சின்-கங்குலி 6610 ரன்கள்
சச்சின்-சேவாக் 3919 ரன்கள்
ரோகித்-தவான் 3000 ரன்கள்
இந்த போட்டியில் இந்திய 5வது ஓவரின் போது 22 ரன்னில் இருந்த போது டிம் சவுதி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோகித் ஷர்மா, இதனால் அவரது மனைவி ரித்திகா சோகமடைந்தார். அந்த வீடியோவை இங்கு பாருங்கள்:
https://twitter.com/VKCrick/status/923166089088966661