வீடியோ : நெ.3யில் கீப்பர் தோனியை வர சொல்லுங்கள், செம்மையாக சிக்னல் கொடுக்கும் ரோகித் 1

இந்திய அணியை ரோகித் கையில் கொடுத்ததும் கொடுத்தார்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார் ரோகித் சர்மா. கேப்டன் பதிவிக்கு ஒன்றும் புதியவர் அல்ல ரோகித் சர்மா இதற்கு முன்னர் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வலி நடித்தி இரண்டு முறை கோப்பை வெல்ல வைத்திருக்கிறார் ரோகித்.Cricket, India, Sri Lanka, Most runs in Boundaries

இதனால் சர்வதேச போட்டியில் விராட் கோலியின் லீவ் காரணமாக இவர் கையில் இந்திய அணி ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ரோகித் பெயர் கேப்டனாக வந்தது. தர்மசலாவில் நடைபெற்ற இவரது முதல் கேப்பிடன்சி அறிமுகம் பெரிய சோதனையை கொடுத்தது. இந்திய அணி அந்த போட்டியில் பரிதாபமாக தோற்றது. ஆனால், இவையெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் போதே பழக்கப்பட்டு போன ரோகித்தை ஒன்றும் செய்யவில்லை. அடுத்த போட்டியிலேயே 153 பந்துகளுக்கு 208 ரன் குவித்து இலங்கை அணிக்கு தன் சூட்டை காட்டினார் ரோகித்.வீடியோ : நெ.3யில் கீப்பர் தோனியை வர சொல்லுங்கள், செம்மையாக சிக்னல் கொடுக்கும் ரோகித் 2

கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு தனி ஆளாக வெற்றி தேடி தந்தார். அப்படியாக எளிதாஹா ஒருநாள் தொடரை கேப்டனாக வென்று கொடுத்தார் ரோகித். டி20 போட்டியிலும் அவரே கேப்டன் என்பதால் முதல் போட்டியில் எளிதாக வென்றது இந்திய அணி. நேற்று (டிச.22) நடந்த இரண்டாவது போட்டியில் கண் அமைக்க கூட நேரம் கொடுக்காமல் ஏதோ வீடியோ கேம் கிரிக்கெட் விளையாடுவது போல் 35 பந்துகளுக்கு சதம் அடித்து உலக சாதனை படைத்தார் ரோகித். இந்த ஆட்டத்தில் 43 பந்தில் 118 ரன் குவித்தார். இந்த ஆட்டத்தில் 12 ஃபோர்களும், 10 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஆட்டத்தில் சமீரவின் பந்தில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.Cricket, India, Rohit Sharma, Most Sixes

இப்படியாக ரோகித் அவுட் ஆகும் போது 12.4 ஓவர்களுக்கு 165 ரன் குவித்திருந்தது இந்திய அணி. ஆட்டத்தை இன்னும் அதிரடியாக தொடர்ந்து ஆட வேண்டும் என நினைத்த ரோகித், அடுத்ததாக ஒரு அதிரடி வீரரை களம் இறக்க வேண்டும் என நினைத்தார், மேலும், கேப்டன் ரோகித் ஆடுகளத்தில் இருந்து அவ ஆகி அப்போது தான் வந்து கொண்டிருக்கிறார். சில நொடிகளுக்குள் அடுத்த பேட்ஸ்மேன் வர வேண்டும். மேலும், நெ.3ல் தோனியை களம் இறக்க முடிவு செய்தார் ரோகித். இதன் காரணமாக அவுட் ஆகி ஆடுகளத்தை விட்டு வெளியே வரும் போது, தோனியை இறக்க வேண்டும் என , ‘ கீப்பர் கீப்பரை அனுப்புங்கள்’ என்பதுபோல் சிக்னல் செய்து தோனியை வர வைத்தார் ரோகித். இந்த செய்கை பார்ப்பதற்கு அற்புதமாகவும், கேப்டன் ரோகித்தின் சமயோஜித புத்தியையும் காட்டியது.

அந்த வீடியோ துணுக்கு கீழே :

https://twitter.com/VideosShots/status/944245762048909313

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *