இது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே... 11 வருடமாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சோக கதை; மிரட்டல் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் !! 1
இது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே… 11 வருடமாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சோக கதை; மிரட்டல் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே... 11 வருடமாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சோக கதை; மிரட்டல் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா 43 ரன்களும், நமன் தீர் 20 ரன்களும், பெர்வீஸ் 46 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியதால் கடைசி ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்தது.

இது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே... 11 வருடமாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சோக கதை; மிரட்டல் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் !! 3

கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் முதல் 2 பந்தில் 10 ரன்கள் விட்டுகொடுத்தாலும், அதே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இதுவரை முதல் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாறு மீண்டும் தொடர்ந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *