இது போட்டி இல்லை போர்... பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !! 1
இது போட்டி இல்லை போர்… பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர் முதலில்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இது போட்டி இல்லை போர்... பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !! 2

கடந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே கொல்கத்தா அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் பெங்களூர் அணியுடனான போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது ஆடும் லெவனில் சில மாற்றங்கள் செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;

பிலிப் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர், ரமன்தீப் சிங், ரிங்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்சித் ரானா, வருண் சக்கரவர்த்தி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆடும் லெவன்;

விராட் கோலி, டூபிளசிஸ், கேமிரான் க்ரீன், ராஜத் படித்தர், கிளன் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மாயன்க் டாகர், முகமது சிராஜ், யஸ் தயால்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *