சென்னை சூப்பர் கிங்ஸ கூட ஜெயிச்சிடலாம்... ஆனா இந்த டீம யாராலயும் ஜெயிக்க முடியாது; ஸ்டீவ் ஸ்மித் உறுதி !! 1
சென்னை சூப்பர் கிங்ஸ கூட ஜெயிச்சிடலாம்… ஆனா இந்த டீம யாராலயும் ஜெயிக்க முடியாது; ஸ்டீவ் ஸ்மித் உறுதி

நடப்பு ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்ற அணிகளை விட வலுவான அணியாக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 22ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த தொடர்களை போலவே நடப்பு தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கும் நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே அதிக வலுவான அணி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், “நடப்பு ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், “தற்போது வரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளிலே ஒவ்வொரு அணியும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியிலும் இதுவே தொடரலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில் அனைத்து அணிகளையும் விட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிவலுவான அணியாக உள்ளது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போதிய பலம் கொண்ட அணியாக உள்ளது. அஸ்வின், சாஹல் போன்ற உலகத்தரம் மிக்க சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ராஜஸ்தான் அணியிடம் உள்ளனர். அதே போன்று வேகப்பந்து வீச்சிலும் ராஜஸ்தான் அணி அதிக பலம் கொண்ட அணியாக இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்துவது சாதரண விசயம் கிடையாது. பேட்டிங்கிலும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் வலுவான வீரர்களாக உள்ளனர். சஞ்சு சாம்சன் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *