சிவம் துபேவுக்கு ஸ்பின்னர்ஸ மட்டும் தான் ஆட தெரியும்னு நினைச்சோம்... ஆனா அந்த பையன் இப்ப வேற ரகம்; பாராட்டி பேசிய மோஹித் சர்மா !! 1
சிவம் துபேவுக்கு ஸ்பின்னர்ஸ மட்டும் தான் ஆட தெரியும்னு நினைச்சோம்… ஆனா அந்த பையன் இப்ப வேற ரகம்; பாராட்டி பேசிய மோஹித் சர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிவம் துபேவை குஜராத் அணியின் சீனியர் வீரரான மோஹித் சர்மா பாராட்டி பேசியுள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமான வீரர்களில் முக்கியமானவரான சிவம் துபே, கடந்த தொடரை போலவே நடப்பு ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலம் சேர்த்து வருகிறார்.

சிவம் துபேவுக்கு ஸ்பின்னர்ஸ மட்டும் தான் ஆட தெரியும்னு நினைச்சோம்... ஆனா அந்த பையன் இப்ப வேற ரகம்; பாராட்டி பேசிய மோஹித் சர்மா !! 2

சிவம் துபே சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே இலகுவாக எதிர்கொள்வார், வேகப்பந்து வீச்சாளர்களை அவரால் எதிர்கொள்ள முடியாது என பரவலாக ஒரு கருத்தும் நிலவி வந்தது. தோனி கடந்த தொடரில் சிவம் துபே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான தனது வியூகங்களை மாற்றி கொள்ள வேண்டும், அவர் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள சிரமப்படுவது உண்மை தான் என்றும் பேசியிருந்தார்.

தன் மீதான விமர்ச்சனங்களையும், பொதுவான கருத்துக்களையும் உடைக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சிவம் துபே, சுழற்பந்து வீச்சாளர்களை போலவே வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சிலும் சிக்ஸர்கள் பறக்கவிட்டு மாஸ் காட்டி வருகிறார். சிவம் துபேவின் இந்த முன்னேற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், குஜராத் அணியின் சீனியர் வீரரான மோஹித் சர்மாவும், சிவம் துபேவின் பேட்டிங் ஸ்டைலை வெகுவாக பாராட்டி  பேசியுள்ளார்.

சிவம் துபேவுக்கு ஸ்பின்னர்ஸ மட்டும் தான் ஆட தெரியும்னு நினைச்சோம்... ஆனா அந்த பையன் இப்ப வேற ரகம்; பாராட்டி பேசிய மோஹித் சர்மா !! 3

இது குறித்து மோஹித் சர்மா பேசுகையில், “சிவம் துபே தனது பேட்டிங்கை முன்னேற்றி கொண்டே வருகிறார். கடந்த சில தொடர்களாகவே அவர் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. ஐபிஎல் தொடரை தாண்டி பார்த்தால் சிவம் துபேவின் இந்த முன்னேற்றம் இந்திய அணிக்கு தான் நன்மை. இந்திய அணி அடுத்ததாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களை எதிர்கொள்ள இருப்பதால் சிவம் துபேவின் இந்த முன்னேற்றம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சிவம் துபே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவார் என்றே நாங்களும் நினைத்து அதற்கு ஏற்ப சில திட்டங்களை வகுத்திருந்தோம், ஆனால் சிவம் துபே எங்களது திட்டங்கள் அனைத்தையும் உடைக்கும் வகையில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டார். நாங்கள் அடுத்து எந்த மாதிரி பந்துகளை வீச போகிறோம் என்பதை கூட சரியாக கணித்துவிட்டு ஒவ்வொரு பந்தையும் சிவம் துபே எதிர்கொள்கிறார். அவர் விளையாடும் விதத்தை வைத்து பார்க்கும் போது அவருக்கு கிரிக்கெட்டில் பெரிய எதிர்காலம் உள்ளது என்றே நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *