போயும் போயும் பங்களாதேஷ் கிட்ட தோப்பீங்கன்னு எதிர்பாக்கல.. ரோகித் சர்மா, டிராவிட் இருவரும் மாற்றப்படுகிறார்களா? - அதிரடி முடிவெடுக்கும் பிசிசிஐ! 1

வங்கதேச தொடர் முடிவுற்றவுடன் ரோகித் சர்மா மற்றும் டிராவிட் இருவரையும் கலந்து ஆலோசிப்பதற்கு அழைத்திருக்கிறது பிசிசிஐ.

டி20 உலக கோப்பை முடிந்ததும் இந்திய அணி, நியூசிலாந்து சென்று 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 0-1 என இழந்தது.

ரோஹித் சர்மா

அதன் பிறகு தற்போது வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரண்டையும் இந்திய அணி தோல்வியடைந்து ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது.

ஏற்கனவே டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி செயல்பட்ட விதம் அதிருப்தி அளிக்கவில்லை என்று பிசிசிஐ தரப்பிலிருந்து தெரியவந்தது. தற்போது வங்கதேச அணியிடம் ஒருநாள் தொடரை இழந்ததால் கடும் அதிருப்திக்கு உள்ளாகியதால், பிசிசிஐ உடனடியாக ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் வங்கதேச தொடர் முடிவடைந்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

போயும் போயும் பங்களாதேஷ் கிட்ட தோப்பீங்கன்னு எதிர்பாக்கல.. ரோகித் சர்மா, டிராவிட் இருவரும் மாற்றப்படுகிறார்களா? - அதிரடி முடிவெடுக்கும் பிசிசிஐ! 2

ரோகித் சர்மாவின் சமீபத்திய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்ற மனநிலையில் பிசிசிஐ ஏற்கனவே இருக்கிறது. மேலும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி சரியான பொருத்தம் இல்லை என்ற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் ஏதேனும் அதிரடியான முடிவை பிசிசிஐ எடுக்குமா? என்கிற சந்தேகங்கள் நிலவி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “டி20 உலககோப்பை முடிந்தவுடன் இந்திய அணியுடன் ஆலோசனை நடத்த இருந்தோம். ஆனால் உடனடியாக நியூசிலாந்து தொடர் இருந்ததால் அதை செய்ய முடியவில்லை. அடுத்த சில நாட்களிலேயே வங்கதேச தொடரும் வந்துவிட்டது ஆகையால் வங்கதேச தொடர் முடித்த பிறகு சில நாட்கள் இருக்கும். அதற்குள் இந்த ஆலோசனையை முடித்து விடலாம் என்று நினைத்தோம். மற்ற தகவல்கள் ஆலோசனை முடித்த பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ராகுல் டிராவிட்

ஒருவேளை டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலகக்கூடுமா? முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுத்தப்படுமா? ராகுல் டிராவிட் டி20 பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வாரா? தொடர்ந்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இருப்பாரா? என்கிற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *