யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்வானால் தான் இந்திய அணிக்கு விளையாட தகுதி அடைய முடியும் என தேர்வுக்குழு, கேப்டன், பயிற்சியாளர் என அனைவரும் வாய் வலிக்கும் வரை சொல்லியாகி விட்டது. வீரர்களும் இந்த தேர்விற்க்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அலுத்து விட்டனர்.
தற்போது பி.சி.சி.ஐ இந்த யோ-யோ உடல் தகுத் தேர்விற்கு தேர்ச்சி அடிப்படை மதிப்பெண் போக மற்ற அடிப்படை விதிகளை வகுக்கத் தயாராகி வருகிறது.
பெங்ளூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடமியில் இந்த உடல்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த உடல் தகுதி தேர்விற்க்காக யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என உடல் தகுதி குறைவால் கைவிடப்பட்ட வீரர்கள் அடிக்கடி யோ-யோ உடல் தகுதி தேர்விற்கு செல்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட மாதம் இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கு முன் இருவரும் யோ-யோ தேர்வில் பங்கேற்றனர், ஆனால் இருவரும் குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெறாததால் அந்த தொடரி தேர்வு செய்யப்படவில்லை.
பின்னர் ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்னும் இதே தேர்வில் பங்குபெற்று தோல்வி அடைந்தனர், அதனால் ஆஸ்திரேலியத் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இவர்களது பெயர் பரிசீலிக்கக்கூடபடவில்லை.
இதனால் மீண்டும் தங்களது ஜிம்மிற்கு சென்று உழைத்து வருகின்றனர். தற்போது யுவராஜ் சிங் மீண்டும் தனக்காக எப்போது இந்த தேர்வு நடத்தப்படும் உள்ளிட்ட கீழே உள்ள கேள்விகளை பி.சி.சி.ஐயிடம் கேட்டுள்ளார்.
யோ-யோ தேர்வை நடத்துவீர்கள்? இப்போது பங்கேற்க்கலாமா? அல்லது எத்தனை முறை ஒரு வீரர் குறிப்பிட்ட காலகட்டத்திற்க்குள் பங்கேற்கலாம் எனக் கேட்க பி.சி.சி.ஐயின் கண் விழித்தது போல், ‘இத நம்ம யோசிக்கவே இல்லையே’ என அதற்கான வறைமுறைகள் தயாரிக்கப்படும் என அவருக்கு பதில் அளித்துள்ளது.
மேலும், இந்த வரையீட்டில்
- ஒரு வீரர் குறிப்பிட்ட காலகட்டத்திற்க்குள் எத்தனை முறை இந்த தேர்வில் பங்கேற்க்கலாம்,
- நடத்தப்படும் அனைத்து முறையும் பங்கேற்க்கலாமா,
- தேர்வாக சரியான மதிப்பெண் என்ன,
- எவ்வளவு காலம் தேர்வான மதிப்பெண் கொண்ட உடல் தகுதியுடன் வீரர்கள் இருக்க வேண்டும்,
போன்ற விதிமுறைகளுக்கான பதிளுடன் இந்த வரையீடு வரையருக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தேர்வில் கலந்து கொண்ட யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, செட்டேஷ்வர் புஜாரா மற்றும் ரவிகச்சந்திரன் அஷ்வின் ஆகொயோர் கலந்து கொண்டனர். நால்வரில் அஷ்வின் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தேர்வாகிவிட்டனர்.
இருவரும் இந்தியாவின் டெஸ்ட் அணியில் முக்கியமான வீரர்கள் ஆவர். அஷ்வின் மூவகையான போட்டிகளிலும் இந்தியாவின் முக்கிய நபராக இருந்து வந்தார். இந்த உடல் தகுதி தேர்வில் தேர்வடைந்தவுடன் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்படலாம் என் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அஷ்வின் மற்றும் அவரது சுழல் சகா ரவிந்திர ஜடேஜா இருவருக்கும் ஓய்வு எனக்கூறி அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதில் மீண்டும் குல்தீப், அக்சர் மற்றும் சகால் ஆகியோரே அணியில் இடம் கண்டனர்.
தற்பொது யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா, ரவி அஷ்வின், சுரீஷ் ரெய்னா ஆகிய அனைவரும் அவரவர் ரஞ்சி கோப்பை அணியில் ஆடி வருகின்றனர். சௌராஸ்ட்ரா அணிக்காக ஆடி வரும் ரவிந்திர ஜடேஜா தற்போது இரட்டை சதம் அடித்து (201) தேர்வுக்குழுவினருக்கு தேர்வு செய்ய வார்னிங் கொடுத்துள்ளார்.

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயனத்தில், முதலில் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகள் நவமபர் 1ஆம் தேதி துவங்குகிறது. எப்படியும் அதற்க்கு முன்னர் ஒரு முறை யோ-யோ உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்று டி20 அணியில் இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றனர் கைவிடப்பட்ட வீரர்கள். இந்திய அணியின் மிடில் ஆடர் தற்போது சற்று சொதப்பி வரும் நிலையில் ரெய்னா மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகிய இருவரும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியில் மீண்டும் நிரந்தர இடத்தைப் பிடிக்க முயற்சிக்கலாம்.
நியூசிலாந்துடனான ஒருநாள் தொடர் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்திய அணியில் லோகீஷ் ராகுல் கைவிடப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், முகமது சமிக்கு ஓய்வளித்து ஷ்ரதுல் தகூரை சேர்த்துள்ளனர்.