இங்கிலாந்து அணியில் மீண்டும் எண்ட்ரீ கொடுக்கிறார் பென் ஸ்டோக்ஸ் !! 1

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முத்தரப்பு டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபரீதத்தில் முடிந்த வெற்றி கொண்டாட்டம்;

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கெத்தாக கைப்பற்றியது.

இந்த தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாட திட்டுமிட்டு, அங்குள்ள இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மதுபான விடுதி ஊழியர் ஒருவருடன் குடி போதையில் தகராறு செய்து, அவரை ஓட ஓட விரட்டி அடித்தார்.

இங்கிலாந்து அணியில் மீண்டும் எண்ட்ரீ கொடுக்கிறார் பென் ஸ்டோக்ஸ் !! 2

இது தொடர்பான சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் ஸ்டோக்ஸ் இருந்ததால், ஆஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில்  இருந்து ஸ்டோக்ஸை நீக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவருக்கு பதிலாக டேவிட் மாலனை அணியில் சேர்த்தது.

மண்ணை கவ்விய ஆஸ்திரேலிய அணி;

ஸ்டோக்ஸ் இல்லாமல் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரே ஒரு போட்டியை மட்டும் போராடி டிரா செய்த இங்கிலாந்து அணி, மற்ற போட்டிகளில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணியில் மீண்டும் எண்ட்ரீ கொடுக்கிறார் பென் ஸ்டோக்ஸ் !! 3

 

135 வருட வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் இந்த தோல்விக்கு ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர் இல்லாததே காரணமாக கருதப்படுகிறது.

மீண்டும் அழைத்தது இங்கிலாந்து;

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் துவங்க உள்ள,  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

வழக்கு விசாரணையில் இருந்து போலீசார் அவரை விடுவிக்கும் பட்சத்தில், டி20 போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் மீண்டும் எண்ட்ரீ கொடுக்கிறார் பென் ஸ்டோக்ஸ் !! 4

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ, மற்றும்  ஆல் ரவுண்டர் மொயீன் அலிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சவாலான தொடர்;

பிப்ரவரி மாதம் 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி நிறைவடையும் இந்த முத்தரப்பு தொடர் நிச்சயம் தங்களுக்கு சவால் நிறைந்த தொடராக இருக்கும், ஆனால் சவால்களை தகர்த்தெறிந்து உலகின் தலை சிறந்த டி.20 அணியாக உருவெடுப்போம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜேம்ஸ் வைடேக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் சமபலம் கொண்ட நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இந்த முத்தரப்பு தொடரில் வெல்வதற்கு, ஜோ ரூட் மற்றும் டேவிட் மாலின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்.,லிற்கும் பச்சைக்கொடி;

ஸ்டோக்ஸ் மீதான  காவல்த்துறை விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள்  முழுமையாக முடிவடைந்தால், இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் ஐ.பி.எல் டி.20 தொடரில் பங்கேற்கவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியில் மீண்டும் எண்ட்ரீ கொடுக்கிறார் பென் ஸ்டோக்ஸ் !! 5

 

முத்தரப்பு தொடருக்கான இங்கிலாந்து அணி;

இயான் மார்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்.

Leave a comment

Your email address will not be published.