ஜனவரி 13ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் அதிக மாற்றங்கள் வேண்டாம் என கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனை கூறினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.
“இந்திய அணியை பற்றி விராட் கோலி கவலை பட வேண்டாம். ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றங்களை ஏற்படுத்த கூடாது,” என சவுரவ் கங்குலி கூறினார்.
தென்னாப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்ற பிறகு, இந்திய அணி சில மாற்றங்களை செய்யும் என தெரிகிறது. இதனால், வீரர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்குமாறு அனுபவம் வாய்ந்த சவுரவ் கங்குலி கூறினார்.

மீதம் உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் கண்டிப்பாக ரிசல்ட் வரும், இதனால் இந்திய வீரர்கள் மீது கேப்டன் விராட் கோலி நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கங்குலி தெரிவித்தார்.
“இது வரை இந்திய வீரர்கள் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார், அதே போல் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இன்னும் இந்திய அணிக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது, கண்டிப்பாக இரண்டு போட்டிகளில் இருந்தும் ரிசல்ட் வரும்,” என கங்குலி மேலும் கூறினார்.
நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் சென்றதை பற்றியும் பேசினார் முன்னாள் இந்திய கேப்டன்.

“இந்திய அணியை பற்றி அனைவரும் பேசுகிறார்கள், ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் சென்றது தான் சரி,” என கூறினார்.
“டெஸ்ட் போட்டியை வெல்ல ரன் அடிப்பது எவ்வுளவு முக்கியமோ, பந்துவீச்சில் விக்கெட் எடுப்பதும் முக்கியம் தான். இந்திய அணியின் வெற்றியை பற்றி ஏன் பேசுகிறோம், முதல் டெஸ்டில் இந்திய அணி 20 விக்கெட்டுகளை எடுத்தது, அதே போல் 2வது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீச வேண்டும்.”
“இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இது தான், முதல் டெஸ்ட் போட்டியிலேயே தென்னாபிரிக்கா மைதானத்தின் நிலையை புரிந்து கொண்டுள்ளார்கள்.”
முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்காத லோகேஷ் ராகுல் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரை பற்றியும் அவர் பேசினார்.
“வெளிநாடுகளுக்கு சென்று லோகேஷ் ராகுல் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் விளையாடி இருக்கிறார்கள். பேட்ஸ்மேனாக அவர்கள் இருவரும் நல்ல ஸ்கோர் அடித்துள்ளார்கள்,” என கூறினார்.
“ஹர்டிக் பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்தார், தொடர்ந்து அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும்,” என தெரிவித்தார் கங்குலி.