வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே.
இது அனைத்தும் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் மோதல் ஏற்பட்டது என தகவல்கள் வந்தன. இந்த முழு பிரச்சனை பற்றி விராட் கோலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால், ராஜினாமா பெற்ற பிறகு ‘கேப்டன் சந்தோசமாக இல்லை என்றால், நாம் விடைபெற வேண்டும்,’ என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதினார்.
இந்த பிரச்சனையின் போது முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரியை இந்திய அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இவருக்கு ஒத்தாசையாக ஜாஹீர் கான் மற்றும் ராகுல் ட்ராவிடை வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு பந்துவீச்சு ஆலோசராகவும் பேட்டிங் ஆலோசராகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது.
ராகுல் டிராவிட் மற்றும் ஜாஹீர் கான் போன்ற சிறந்த வீரர்களை ஒத்தாசைக்கு வைத்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
முதலில், அனில் கும்ப்ளேவின் பயிற்சியால் இந்திய வீரர்கள் திருப்தியாக இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது. இதனால், பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா பெற்றார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ரவி சாஸ்திரிக்கு ஒத்தாசையாக சிறந்த வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் ஜாஹீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இது அனைத்தும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களை அவனமானம் படுத்துவது போல் தெரிகிறது.
Kumble, Dravid and Zaheer were true greats of the game who gave it all on the field. They did not deserve this public humiliation.
— Ramachandra Guha (@Ram_Guha) July 16, 2017