சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டது நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம். கோரே ஆண்டர்சன், மிட்சல் மெக்லனகன் மற்றும் ஆடம் மில்னே காயத்தில் இருந்து மீண்டதால் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இவர்களின் பெயர்களை சேர்த்துள்ளனர். இவர்கள் காயத்தில் இருந்து திரும்பியதை இந்த ஐபில் தொடரில் நிரூபித்தார்கள்.
இந்த அணியில் 5 பேட்ஸ்மேன், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து-ஆல்ரவுண்டர்கள், இரண்டு ஸ்பின்னர் மற்றும் இரண்டு விக்கெட்-கீப்பர்கள் உள்ளார்கள்.
இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடங்குவதற்கு முன்பு ஐயர்லாந்து, வங்கதேசம் கலந்து கொள்ளும் முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் மோதுகிறது நியூஸிலாந்து.
நியூஸிலாந்து அணி – கேன் வில்லியம்சன் (C), கோரே ஆண்டர்சன், ட்ரெண்ட் போல்ட், நீல் ப்ரூம், கொலின் டி க்ராந்தோம்மே, மார்ட்டின் குப்தில், டாம் லதம், மிட்சல் மெக்கலனகன், ஆடம் மில்னே, ஜிம்மி நிஷாம், ஜித்தன் பட்டேல், லுக் ராஞ்சி, மிட்சல் சான்டனர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.