Cricket, India, Sri Lanka, Shikhar Dhawan, KL Rahul, Kuldeep Yadav

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தவான், லோகேஷ் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொணட டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. இந்த மூன்று டெஸ்டில் இரண்டு சதங்கள் உள்பட 358 ரன்கள் குவித்தார் தவான். இதனால் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2-வது மற்றும் 3-வது டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம் லோகேஷ் ராகுல் 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே இதற்குமுன் 9-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது மீண்டும் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

96 பந்தில் 108 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா 45 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மொகமது ஷமி ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தையும், உமேஷ் யாதவ் ஒரு இடம் முன்னேறி 21-வது இடத்தையும் பிடித்துள்ளனர். குல்தீப் யாதவ் 29 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தை பிடித்துள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *