ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க.. விராட் கோலிக்கு அப்புறம் ரோகித் சர்மா வந்தது, இந்தியாவுக்கு அடிச்ச அதிஷ்டம் - ராகுல் டிராவிட் பேச்சு! 1

விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரோகித் சர்மா போன்ற ஒருவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டது இந்தியாவிற்கு அமைந்த அதிர்ஷ்டம் என்று பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.

இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவின் நடைபெற்று வருகிறது. மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டையும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க.. விராட் கோலிக்கு அப்புறம் ரோகித் சர்மா வந்தது, இந்தியாவுக்கு அடிச்ச அதிஷ்டம் - ராகுல் டிராவிட் பேச்சு! 2

2017-2022 வரை கடைசி மூன்று முறையும் இந்திய அணி தான் பார்டர்  கவாஸ்கர் கோப்பையை வென்றது. மீண்டும் ஒருமுறை தக்க வைத்துள்ளது. மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இருப்பது இந்திய அணியின் அணுகுமுறையில் தெரிகிறது.

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ராகுல் டிராவிட் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு குறித்தும் அணுகுமுறை குறித்தும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ராகுல் டிராவிட் பேசியதாவது:

ராகுல் டிராவிட்

“கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருக்கு என்று தனி மரியாதை இருந்து வருகிறது. நீண்ட காலமாக இந்திய அணியில் இருக்கும் வெகு சில வீரர்களுள் அவரும் ஒருவர். பொதுவாக ரோகித் சர்மா நிறைய பேச மாட்டார். அவர் பேச ஆரம்பித்தால் மற்ற வீரர்கள் நகராமல் கவனமுடன் கேட்பார்கள். விராட் கோலி போன்ற ஒருவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் அந்த பொறுப்பை ஏற்று வழிநடத்துவது இந்திய அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.” என்றார்.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை பற்றி பேசிய ராகுல் டிராவிட், “கிட்டத்தட்ட 200 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தோம். அப்போது அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடிய விதம் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க.. விராட் கோலிக்கு அப்புறம் ரோகித் சர்மா வந்தது, இந்தியாவுக்கு அடிச்ச அதிஷ்டம் - ராகுல் டிராவிட் பேச்சு! 3

அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கத்தில் தவறான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி ரன்களை விட்டுக் கொடுத்தது சற்று கலக்கத்தை கொடுத்தது. 3ம் நாள் காலையில் சில நேரங்களிலேயே ஸ்பின்னர்கள் இருவரும் சரியான லைன் மற்றும் லென்தில் பந்துவீசி விரைவாக விக்கெட்டுகளை எடுத்தது இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வருவதற்கு உதவியது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *