நியூசிலாந்து அணியுடனான் டி20 தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் வெற்றி குறித்து கூறியதாவது,
இந்த போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்தோம், நல்லபடியாக போட்டி நடக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. மக்கள் ஏமாற்றத்துடன் செல்லாமல் போட்டியை ரசித்தது மகிழ்க்சி அளிக்கிறது.
ஒருநாள் தொடர் துவங்கிய போட்திலிருதே நியூசிலாந்து அணியிடம் ஒரு நல்ல போராட்டத்தை எதிர்பார்த்தோம். இந்த போட்டியில் ஆரம்பத்தில் சற்று பதட்டமாக இருந்தது. ஆடுகளத்தில் சற்று நீர் சேர்ந்துவிட்டது.
ரன் ரேட்டை அதிகமாக்க நினைத்தோம், ஆனால் அது அவ்வளவு எளிதான வேலையாக இல்லை. கடைசிக்கு முன் ஓவரை பும்ராவும் கடைசி ஒவரை ஹர்திக்கும் வீச ரோகித் மற்றும் தோனி கூறினர். அதன் படியே செய்தோம்.
கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா காயமடைந்தவுடன் நான் அந்த மீதமிருந்த 4 பந்துகளை வீச நினைத்தேன். (புண்முறுவலுடன்). அடுத்தடுத்து சில தொடர்களை வென்றுவிட்டோம். இது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு ஸ்டேடியம் அழகாக இருக்கிரது மைதானம் அற்புதமாக இருக்கிறது, மக்கள் கூட்டம் மேலும் அதனை அழகுபடுத்திவிட்டது
எனக் கூறினார் கேப்டன் விராட் கோலி.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டது. இதில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
டாஸ் வென்று கடினமான பிட்சில் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி பேட் செய்து 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுக்க, இலக்கை விரட்டிய நியூஸிலாந்து 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 61 ரன்களுக்கு முடங்கியது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
இந்திய அணி பேட்டிங்கில் சாண்ட்னர், சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோரிடம் திணறியது. சாண்ட்னர் பந்துகள் நன்றாகத் திரும்பின. விராட் கோலி அருமையாகத் தொடங்கினார். இஷ் சோதி பந்தில் ஒரு பவுண்ட்ரி, ஒரு சிக்ஸ் அடித்தார், ஆனால் 13 ரன்கள் எடுத்து சோதி வீசிய பந்தில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.
ஷார்ட் பிட்ச் பந்து கொஞ்சம் வேகமாக வந்தது சிக்ஸ் பந்து என்று அதனை தூக்கினார், ஆனால் ஷாட்டில் பவர் இல்லை, போல்ட் கேட்ச் எடுக்க கோலி 6 பந்துகளில் 13 ரன்களில் வெளியேறினார்.
சாண்ட்னரின் அருமையான கேட்ச்கள்:
ஷிகர் தவண் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தை மேலேறி வந்து அடிக்கப் பார்த்தார் பந்து சரியாகச் சிக்கவில்லை, பாயிண்டில் எழும்பியது பின்னால் ஓடிச்சென்று சாண்ட்னர் கேட்ச் எடுத்தார். இது அருமையான கேட்சாக அமைந்தது.
இதற்குள் ரோஹித் சர்மா பேட்டிங் முனைக்கு கிராஸ் செய்தார். சவுதியின் லெக் திசை ஆஃப் கட்டரை ரோஹித் புல் ஷாட் ஆடினார் இந்த ஷாட்டும் சரியாகச் சிக்கவில்லை டீப் ஸ்கொயர் லெக்கில் பந்து தரையிறங்கிக் கொண்டிருந்த போது ஓடி வந்த சாண்ட்னர் மிக அருமையாகப் பிடித்தார், கடினமான கேட்ச். அடுத்தடுத்து இரண்டு அபார கேட்ச்கள், இந்திய அணி தொடக்க வீரர்களை சவுதியிடம்… இல்லை…சாண்ட்னரிடம் இழந்தது.
பிறகு மணீஷ் பாண்டே (17) புல் ஷாட் ஒன்றை லாங் ஆனில் ஆட, சாண்ட்னர் கேட்சிற்காக ஓடி இருகால்களும் தரையிலிருந்து எழும்ப சமநிலை இழந்தார். ஆனாலும் பந்தை டி கிராண்ட்ஹோமுக்கு த்ரோ செய்தார். அவர் கேட்ச் எடுத்தார், உண்மையில் திகைக்க வைக்கும் ஒரு கேட்ச் உதவியைச் செய்தார் சாண்ட்னர்.
மணீஷ் பாண்டே 11 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களை அதிகபட்சமாக எடுக்க, ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சருடன் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். தோனி 0 நாட் அவுட். இந்தியா 8 ஓவர்களில் 67/5 என்று முடிந்தது.
கொலின் மன்ரோ முதல் பந்திலேயே மேலேறி வந்து புவனேஷ்வர் குமாரை மிட்விக்கெட்டில் தூக்கி சிக்ஸர் அடித்து அதிர்ச்சியளித்தார். ஆனால் புவனேஷ்வர் குமார் விரலால் வீசும் பந்துகள் மூலம் வேகத்தைக் குறைத்து அதே ஓவரில் மன்ரோவைக் கட்டுப்படுத்தினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மார்டின் கப்தில் முன் காலை ஒதுக்கிக்கொண்டு லெக் திசையில் விளாச முயன்று தோல்வியடைந்தார். ‘யூ மிஸ், ஐ ஹிட்’ பந்து, பவுல்டு ஆனார் கப்தில் (1).
மன்ரோவுக்கு பும்ரா அருமையாக வீசினார். பந்தின் தையலைப் பயன்படுத்தி எழுப்பினார் பந்தை ஷார்ட் ஆஃப் லெந்தில் பிட்ச் செய்து மன்ரோவுக்குக் குறுக்காகச் செலுத்தினார், இரண்டு பந்துகள் ரன் வரவில்லை. இதற்காக மேலேறி வந்து ஆடிய மன்ரோ ஷார்ட் பிட்ச் பந்தை கிராஸ் பேட் போட்டார் பந்து மிட் ஆன் மேல் எழும்பியது ரோஹித் சர்மா அற்புதமான ஒரு கேட்சை எடுக்க அபாய மன்ரோ 7 ரன்களில் வீழ்ந்தார்.
நியூஸிலாந்து அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் தேவையாக இருந்த போது சாஹல் அருமையாக வீசி முதல் 2 பந்துகளில் கிராண்ஹோம் மட்டையைக் கடந்து செல்லுமாறு வீசினார். அந்த ஓவரில் 3 ரன்களையே கொடுத்தார்.
7வது ஓவரை பும்ரா வீசினார். பந்து தோனி முன்பாக பவுன்ஸ் ஆனாலும் அவர் அதனை அருமையாகத் தடுத்தார் ஒரு ரன் ஓடியதால் ஒரு பை, ஒரு வைடு 2 ரன்கள் வந்தது, 3 ரன்களை தோனி தடுத்தார்.
அடுத்த பந்தில் புரூஸ் ரன் அவுட் ஆனார். கடைசி 6 பந்துகளில் நியூஸிலாந்துக்குத் தேவை 19 ரன்கள். 61/6 என்று முடிந்தது நியூஸிலாந்து.
இந்திய அணியில் பும்ரா 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்ற சாஹல் பவுண்டரி கொடுக்காமல் 2 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றார் பும்ரா. விராட் கோலி தலைமையில் இன்னொரு தொடரை வென்றது இந்திய அணி.