ஓய்வு பெற்ற புண்ணகை மன்னன் நெஹ்ராவிற்கு கேப்டன் கோலி வாழ்த்து 1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொட டி20 தொடர் நேற்று டெல்லியின் ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன் குவித்தது. பின்னர் அந்த இமாலய இலக்கை நோக்கி ஓடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாமல் 20 ஓவர் முடிவில் 149 ரன் மட்டுமே அடித்து 53 வித்யாசத்தில் தோல்வி அடைந்தது.

வெற்றியை விட சிறப்ப என்னவென்றால், ஆசிஷ் நெஹ்ராவின் சொந்த மண்ணிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டது தான். அவர் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய டெல்லி மைதானத்திலேயே அவர் ஓய்வு பெற்றது அவருக்கு அலாதியான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.ஓய்வு பெற்ற புண்ணகை மன்னன் நெஹ்ராவிற்கு கேப்டன் கோலி வாழ்த்து 2

மேலும், இந்த கடைசி போட்டியில் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலி நெஹ்ராவை விளையாட வைத்து அழகு பார்த்தார். அவருக்கு சரியான நேரத்தில் பந்து வீச்சைக் கொடுத்து அவருக்கான மரியாதையையும் அளித்தார் கோலி.

இந்த போட்டியில் 4 ஒவர்களும் வீசிய நெஹ்ரா 29 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது Old Wine திறத்தை வெளிப்படுத்தினார். இந்த பந்து வீச்சின் போது டெல்லி மைதானத்தின் ஒரு எல்லையான ‘ஆசிஷ் நெஹ்ரா’ எண்டில் இருந்து பந்து வீசினார். அவர் பெயர் வைக்கப்பட்ட எண்டில் இருந்து பந்து வீசிய காட்சி அலாதியாக இருந்தது. இது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது முறை. போட்டி முடிந்தவுடன் நெஹ்ரா தனது சொந்த மைதானத்தில் தனது மக்களிடம், மைதானத்தை சுற்றி வந்து மனம் நெகிழ விடைபெற்றார்.

அவருடைய டெல்லி அணி சகாக்கள் , சிகர் தவான் மற்றும் விராட் கோலி இருவரும் ஆசிஷ் நெஹ்ராவை தங்களது தோலில் தூக்கி வைத்து மகிழ்ச்சியாக மைதானத்தை சுற்றி வந்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். அனைவரும் மைதானத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து அரட்டை அடித்து செல்ஃபிக்கள் எடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.ஓய்வு பெற்ற புண்ணகை மன்னன் நெஹ்ராவிற்கு கேப்டன் கோலி வாழ்த்து 3

நெஹ்ரா சரியாக 1999ஆம் ஆண்டு இந்திய அணியில் முகமது அசாருதின் தலைமையில் தனது அறிமுக போட்டியில் ஆடினார். தற்போது 38 வயதான நெஹ்ரா இந்திய அணிக்காக 18 வருடம் கிரிக்கெட் ஆடியுள்ளார். மிகத்திறமை வாய்ந்த ஆட்ட நுணுக்கங்களை அறிந்த நெஹ்ரா அவ்வப்போது ஏற்ப்பட்ட காயங்களால் அவரால் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு ஆடயிலவில்லை. இதுவரை 12 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார் நெஹ்ரா.

https://twitter.com/anandkatakam/status/925748370932621312

இதுவரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள நெஹ்ரா 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும் 27 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளிலும் அசத்தியுள்ள நெஹ்ரா 88 போட்டிகளில் 106 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வகையிளான பொட்டிகளிலும் ஓய்வை அறிவித்துள்ள நெஹ்ரா ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடமாட்டார்.

தற்போது நெஹ்ராவின் ஓய்விற்கு பல்வேறு தரப்பினரும், முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

ஓய்வு பெற்ற புண்ணகை மன்னன் நெஹ்ராவிற்கு கேப்டன் கோலி வாழ்த்து 4

போட்டி முடிந்தவுடன் தனது ட்விட்டர் பக்க்த்தில் அழகான வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்,

 

 

https://twitter.com/SriniMama16/status/925749478811770882

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *