தோனி ஒரு சாதரண வீரர் மட்டும் கிடையாது... தோனியின் உயிர் ரசிகரை போன்று உருக்கமாக பேசிய பார்த்தீவ் பட்டேல் !! 1
தோனி ஒரு சாதரண வீரர் மட்டும் கிடையாது… தோனியின் உயிர் ரசிகரை போன்று உருக்கமாக பேசிய பார்த்தீவ் பட்டேல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமுமான தோனியை முன்னாள் கிரிக்கெட் வீரரான பார்த்தீவ் பட்டேல் உயர்வாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பல வருட உலகக்கோப்பை கனவை நிறைவேற்றி கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், ஐசிசி.,யால் நடத்தப்படும் மூன்று தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஒரே கேப்டனான தோனி கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி, உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிகரமாக நடத்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Robin Uthappa
Robin Uthappa

தோனியின் ஓய்விற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த போவது யார் என்ற விவாதம் அதிகமாக நிலவி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான பார்த்தீவ் பட்டேல், தோனியை உயர்வாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து பார்த்தீவ் பட்டேல் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கரின் கடைசி போட்டியை பார்க்க வந்த அனைத்து ரசிகர்களும் சச்சின் டெண்டுல்கரின் கடைசி உரையை கேட்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தோனியின் பேச்சை கேட்பதற்காகவே ஒட்டுமொத்த ரசிகர்களும் இறுதி வரை காத்திருந்தனர். தோனி என்பவரை கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு சாதரண கிரிக்கெட் வீரராக மட்டும் பார்க்கவில்லை, அதே போன்று தோனி என்பது வெறும் பெயர் மட்டும் இல்லை, ஒரு எமோசன். தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக தோனியின் ஜெர்சி எண்ணான 7ஐ தான் ரிட்டயர் செய்துள்ளது. இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை. கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *