இந்திய கிரிக்கெட்டில் அதிக விவாத மோதல்கள் முடிவுக்கு வரும் முயற்சியில், உச்சநீதிமன்றம் நியமிக்கப்பட்ட குழு நிர்வாகி (CoA) தேசிய குழுவோடு தொடர்புடைய அனைவருக்கும் இரண்டு ஆண்டு ஒப்பந்தங்கள் வழங்க முடிவு செய்துள்ளார். இரண்டு வருட ஒப்பந்தம் செய்வதால், தேசிய அளவில் இருக்கும் பயிற்சியாளர்கள், இனி இந்திய பிரீமியர் லீக் தொடரில் பயிற்சியாளராக இருக்க வாய்ப்பு இல்லை.
ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியா – A அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். இதனால், இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தான் டிராவிட் முடிவு செய்ய வேண்டும். தேசிய அளவில் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தை அளிக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ).
“இனி அனைத்து ஒப்பந்தங்களும் இரண்டு வருடம் தான்,” என வினோத் ராய் கூறினார்.
இதை பற்றி பேச ஜூன் 11 (திங்கட்கிழமை) அன்று புது டெல்லியில் CoA கூட்டம் போட்டது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் பயணத்திற்கு முன்பு புதிய பயிற்சியாளரை நியமிக்க போதிய நேரம் இல்லாததால், அணில் கும்ப்ளே பயிற்சியாளராக இருக்கலாம். ஆனால் இது அணில் கும்ப்ளே கையில் தான் இருக்கிறது என வினோத் ராய் கூறினார்.
“ஒரு வருட ஒப்பந்தத்தில் தான் அணில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது. அதை, நாங்கள் கடைபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கு போதிய நேரம் இல்லாததால், வெஸ்ட் இண்டீஸ் பயணத்திற்கு அணில் கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பார்,” என ராய் கூறினார்.
“புது பயிற்சியாளர் பற்றி கிரிக்கெட் நிர்வாக குழு லண்டனில் கூட்டம் போடும்,” என ராய் மேலும் தெரிவித்தார்.