இலங்கை vs இந்தியா 2017: அடுத்த தொடரில் முடிவெடுக்க கூடிய ஐந்து விஷயங்கள்

தற்போது இலங்கையில் இந்திய அணி ஒருநாள் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தை டெஸ்ட் தொடருடன் தொடங்கிய இந்தியா – இலங்கை அணி, டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, இந்திய அணியுடன் வெற்றி பெறுவது சுலபமில்லை. ஆனால், இது போன்ற விளையாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்னொரு பக்கம், இந்திய அணியில் அதிரடி வீரரான யுவராஜ் சிங்கிற்கு இடம் கொடுக்காததற்கு என்ன காரணம் என இந்திய ரசிகர்கள் கேட்டு கொண்டே இருக்கின்றனர்.

இங்கிலாந்தில் நடைபெற போகும் 2019 உலகக்கோப்பை தொடரை தான் இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்னும் முனைப்பில் உள்ளது. இதை தான், 2019 உலகக்கோப்பைக்கான வேலை இலங்கை தொடரில் இருந்து தொடரும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அடுத்த தொடரில் முடிவெடுக்க கூடிய ஐந்து விஷயங்களை இப்போது பார்ப்போம்:

கூடுதல் பந்துவீச்சாளர் தேவை

சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டை பேட்ஸ்மேன்கள் தான் ஆள்கிறார்கள். இதனால், ஒருநாள் போட்டிகளில் ஐந்து பந்துவீச்சாளர்கள் பத்தாது. ஏதேனும் ஒரு பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால், அந்த அணிக்கே பின்னடைவு தான். இதனால், கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கவேண்டும்.

ஹர்டிக் பாண்டியாவுடன் இந்திய அணியில் 5 பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸுடன் இந்திய அணியின் ஹார்டிக் பாண்டியாவை ஒப்பிட்டு பேசினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. பென் ஸ்டோக்ஸ் 6வது இடத்தில் விளையடுவார், பாண்டியா 7வது இடத்தில் விளையாடுவார். இதனால், இந்திய அணிக்கு மேலும் ஒரு பந்துவீச்சாளர் தேவை.

ஹர்டிக் பந்தியாவின் அதிரடி ஆட்டம்

ஹர்டிக் பாண்டியா மீது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நம்பிக்கை வைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானது முதல், சிறப்பாக விளையாடி வருகிறார்.

தன் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி ரசிகர்களுக்கு ஹர்டிக் பாண்டியா விருந்து படைத்துள்ளார். அதே போல், இலங்கை தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

சுழற் பந்துவீச்சாளர்கள்

தற்போது, சுழற் பந்துவீச்சாளர்களை தேர்ந்தேடுப்பதில் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு ஒரே குழப்பாக இருக்கிறது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் கவுண்டி கிரிக்கெட் விளையாடவுள்ளதால், குல்தீப் மற்றும் அக்சர் பட்டேலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

அத்துடன் யுஸ்வேந்த்ர சஹாலும் அணியில் உள்ளதால், யாரை விளையாட வைப்பது என்று குழப்பம் நிலவுகிறது. 2015 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் மற்றும் ஜடேஜா போதிய அளவில் ஜொலிக்காததால், இனி அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வி எழுகிறது.

4வது இடம் யாருக்கு?

இந்திய அணிக்காக 4வது வீரராக களமிறங்குவதில் பல சிக்கல்கள் இருப்பது போல் தெரிகிறது. அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே ஆகியோர் அந்த இடத்தில் விளையாடி உள்ளனர்.

அதே இடத்தில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 4வது வீரராக இறங்கி சிறப்பாக விளையாடியுள்ளார். அந்த இடத்தில் இறங்கிய அவர் டி20 போட்டிகளில் சதமும் அடித்திருக்கிறார்.

தோனியின் எதிர்காலம்

இதை பற்றி பேசுவதற்கு கஷ்டமாக தான் இருக்கிறது, ஆனால் தோனியின் எதிர்காலம் இந்த தொடரை பொறுத்து தான் இருக்கிறது என்பது உண்மை.

ஒருநாள் போட்டிகளில் சராசரி 60 வைத்திருக்கும் மகேந்திர சிங் தோனி, நன்றாக விளையாட சிரமம் படுகிறார். செட்டில் ஆகவே பல பந்துகளை சாப்பிடுகிறார் தோனி.

ஆனால், செட்டில் ஆகிவிட்டால் எதிரணி பந்துவீச்சாளர்கள் அழுது விடுவார்கள். என்னதான் இருந்தாலும், தொடர்ந்து இந்திய அணியில் விளையாட, இந்த இலங்கை தொடரில் தோனி சிறப்பாக விளையாட வேண்டும்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.