இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார், ஆனால் இந்த முறை தோனியின் சாதனையை சமன் செய்தார். வெளிநாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான இந்திய கேப்டன்கள் பட்டியலில் தோனியை சமன் செய்து, மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 11 வெற்றிகளுடன் சவுரவ் கங்குலி நீடிக்கிறார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை செய்தார் கோலி. ஏற்கனவே இந்த தொடரை இந்தியா முன்னிலையில் இருக்க, இந்த தொடரில் ஒரே போட்டி தான் மீதம் உள்ளது.
2014-15 ஆஸ்திரேலியா தொடரில் கேப்டன்சி பொறுப்பை வாங்கிய விராட் கோலி, அந்த தொடரை சமன் செய்தார். அடுத்து இலங்கையிடம் முதல் போட்டி தோல்வி பெற்றது. அதன் பிறகு பொங்கி எழுந்த இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
அதன் பிறகு, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் வெற்றிகளை குவித்து வந்தது இந்தியா.
டெஸ்ட் போட்டிகளில் தோனியின் வெற்றி சாதனையை முறியடிக்க, விராட் கோலி இன்னும் 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறவேண்டும்.