அதிக ஒருநாள் போட்டிகளை வென்றுள்ள முதல் 10 அணிகள்

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட் துவங்கிய காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு இருக்கின்றன. தற்போது வரை ஒருநாள் போட்டிகள் துவங்கி 46 ஆண்டுகள் ஆகிறது. 1971 முதல் 1983 வரை 60 ஒவர் வைத்து ஒருநாள் போட்டிகள் ஆடப்பட்டுள்ளன. அதன் பின்னர் தற்போது வரை 50 ஒவர் நிர்ணயிக்கப்பட்டு ஆடப்பட்டு வருகிறது.

தற்போது ஒருநாள் போட்டிகள் துவங்கியதில் இருந்து இப்போது வரை எந்தெந்த அணிகள் ஆதிக்கம் செலுத்தி அதிக வெற்றிகள் பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.

10.வங்கதேசம் – 108 வெற்றிகள்

1971ல் உருவான நாடு வங்கதேசம். பின்னர் 1986ல் தான் முதல் சர்வதேச போட்டிகளை ஆடத் துவங்குகின்றனர். தங்கள் முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடி தோற்றது வங்கதேச அணி. 2000மாம் ஆண்டில் டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தை பெறுகின்றது வங்கதேசம்.

இதுவரை 340 ஒருநாள் போட்டிகளை ஆடியுள்ள வங்கதேச அணி அதில் 108 போட்டிகளில் வென்று இந்த பட்டியளில் 10ஆவது இடத்தைப் பிடிக்கின்றனர்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

SW Staff:

This website uses cookies.