கிரிக்கெட் சகாப்தம் ஆரம்பித்த நொடியில் இருந்தே பல சாகசங்கள் நிகழ்த்தப்பட்ட வருகின்றன. அதில் பலவன முறியடிக்கப்பட்டும் படைக்கப்பட்டும் வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் புதுப்புது சாதனைகள் படைக்க பட்டாலும் அதில் சிலவற்றை முறியடிக்க முயற்சிகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.
அவற்றில் சிலவற்றை இந்திய வீரர்கள் படைத்துள்ளனர். அதில் முறியடிக்க முடியாத சாதனையாக கருதப்படும் சாதனைகளை இக்கட்டுரையில் காண்போம்.
1. தொடர்ந்து அதிக மெய்டன் ஓவர்கள்
கிரிக்கெட் உலகில் தங்களது திறமையை நிரூபிக்க ஏதுவான போட்டி டெஸ்ட் போட்டிகள் ஆகும். அதில் இடம் பிடிப்பதே பல வீரர்களின் கனவாகும். சிலர் டெஸ்ட் போட்டிகளுக்காகவே தங்களை அற்பணித்துள்ளார். அவர்களில் பாபு நாட்கர்னி ஒருவர்.
மெட்ராஸ் மைதானத்தில் என்கிழந்துக்குபேஷிரான போட்டியில் இவர் தொடர்ச்சியாக 21 ஓவர்கள் மெய்டன் ஓவராக வீசியுள்ளார். குறிப்பாக, தொடர்ந்து 131 பந்துகள் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இது இன்றளவும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது.
பாபு நாட்கர்னி குறைந்த ரன்களை விட்டுக்கொடுக்கும் பந்து வீச்சாளர்களில் ஒருவர். அதிக விக்கெட்டுக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுப்பார்.
2. டெஸ்ட் போட்டியின் முதல் ஓவர் ஹாட்ரிக்
2006ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.
ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்துவது தற்போது எளிதாக ஆனாலும், டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவது மிகவும் கடினம். அதுவும், இன்னிங்சின் முதல் ஓவரில் என்றால் மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது.
3. அதிக பந்துகள் வீசிய விக்கெட் கீப்பர்.
கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய வீரர் தோனி என்றால் அது யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் கேப்டன் பொறுப்பில் இருக்கும் பொழுது ஐசிசி யின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று இருக்கிறார்.
தோனியின் கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் திறமையும் அசாத்தியமானது. அதுமட்டுமின்றி கிரிக்கெட் வரலாற்றில் 132 பந்துகள் வீசியுள்ளார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகபட்ச பந்துகள் ஆகும். மேலும், ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
4. ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்கள்
முதன் முதலில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதங்கள் அடித்து சச்சின் துவங்கி வைத்தாலும், அதை தோடர்ந்து நிகழ்த்தி கொண்டிருப்பவர் ரோஹித் சர்மா.
முதன் முதலில் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 209 ரன்கள் விளாசினார். அதன் பிறகு அசைக்க முடியாத 264 ரன்களை இலங்கைக்கு எதிராக விளாசி துவம்சம் செய்தார்.
மேலும், மூன்றாவது முறையாக 2017ம் ஆண்டு 208 ரன்கள் விளாசி, மூன்றாவது முறையாக இரட்டை சதத்தை நிகழ்த்தி, அதிக முறை இரட்டை சதங்கள் விளசியவர்கள் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தை பெற்றார். இதனால், இது முறியடிக்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.
5. தனி நபரின் 100 சதங்கள்
லிவிங் லெஜெண்ட் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. இவர் நிகழ்த்திய சாதனைகளில் ஓன்று தான் 100 சதங்கள்.
டெண்டுல்கர் தனது 100வது சதத்தை 2012 ம் ஆண்டு நிகழ்த்தினார். இவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது என அனைவரும் நம்புகின்றனர். ஆனால் சிலர் விராத் கோலி இந்த சாதனையை எளிதில் நிகழ்த்தி விடுவார் எனவும் கூறுகின்றனர். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.