சிறந்த வீரர் விருதை பெற்ற விராட் கோஹ்லி… ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !! 1

சிறந்த வீரர் விருதை பெற்ற விராட் கோஹ்லி… ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !!

2017ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டிற்கான கிரிக்கெட் விருதுகளை ஐ.சி.சி., இன்று அறிவித்தது. இதில் கடந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற உயரிய பெருமையை இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கு ஐ.சி.சி., அளித்துள்ளது.

சிறந்த வீரர் விருதை பெற்ற விராட் கோஹ்லி… ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !! 2

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து  2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, டெஸ்ட், டி.20 மற்றும் ஒருநாள் உள்ளிட்ட அனைத்து தொடர்களிலும் கோஹ்லியின் சிறப்பான செயல்பாடுகளை தொடர்ந்தே கோஹ்லி சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 77.80 சராசரியில் 2203 ரன்களை குவித்துள்ளார் விராட் கோஹ்லி.

ஒருநாள் போட்டிகளில் 82.63 சராசரியில் 1818 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் அடங்கும். மேலும், டி20 போட்டிகளில் 153 ஸ்ரைக் ரேட்டில் 299 ரன்களை குவித்துள்ளார்.

ஐ.சி.சி.,யின் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் கோஹ்லி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி டிரெண்டாகியுள்ளது. குறிப்பாக ட்விட்டர் வாசிகள் கோஹ்லியை கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/RoshniWalia45/status/953863733775749121

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *