இதுவரை பல கிரிக்கெட்டர்கள் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் சில வீரர்கள் 8000 ரன்னும் அடித்து உள்ளனர். ஆனால், சில கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தான் இந்த மைல்கல்லை வேகமாக அடித்துள்ளனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் வேகமாக 8000 ரன் டாப் 10 வீரர்கள் பாப்போம்.
கிறிஸ் கெய்ல் – 221 இன்னிங்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், ஒருநாள் போட்டிகளிலும் பல சாதனைகளை வைத்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனியாளாய் பல போட்டிகளை வென்றுள்ளார்.
2011-இல் வங்கதேசத்துடன் விளையாடும்போது, இவரது 221-வது இன்னிங்சில் 8000-ரன் கடந்தார் கிறிஸ் கெய்ல்.
ரிக்கி பாண்டிங் – 220 இன்னிங்ஸ்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங், அவர் விளையாடும் காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டனர். 2005-இல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது அவரது 220வது இன்னிங்சில் ஒருநாள் போட்டிகளில் 8000 ரன் அடித்தார்.
டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் – 219 இன்னிங்ஸ்
1980-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல தொடக்க வீரராய் இருந்தார் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ். இந்த மைல்கல்லை அவரது 219வது இன்னிங்சில் 1993-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் விளையாடும்போது அடைந்தார்.
சயீத் அன்வர் – 218 இன்னிங்ஸ்
முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் சயீத் அன்வர், அவரது காலத்தில் அனைத்து பந்துவீச்சாளரையும் பதம் பார்த்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டனர். இவரது 218-வது இன்னிங்சில் 8000 ஒருநாள் ரன்களை அடித்தார் அன்வர்.
எம்.ஸ். தோனி – 214 இன்னிங்ஸ்
இந்த உலகத்துலேயே சிறந்த விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன்களுள் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல போட்டிகளை தனியாளாக அடித்து வெற்றி வாங்கி தந்திருக்கிறார். இவரது 214-வது இன்னிங்சில் 2014-ஆம் ஆண்டில் நியூஸிலாந்துடன் விளையாடும் போது 8000 ரன் கடந்தார்.
பிரைன் லாரா – 211 இன்னிங்ஸ்
கிரிக்கெட் வரலாற்றில் பிரைன் லாராவை சிறந்த வீரராக கருதப்பட்டனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 1990 மற்றும் 2000 காலத்தில் தனியாளாய் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக போராடினார். 2003-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவரது 211-வது இன்னிங்சின் போது இவர் மைல்கல்லை கடந்தார்.
சச்சின் டெண்டுல்கர் – 210 இன்னிங்ஸ்
இந்திய தலைசிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் தான் என அனைவருக்குமே தெரியும். ஒருநாள் போட்டிகளில் இருக்கும் பல சாதனைகளுக்கு இவர் தான் சொந்தக்காரர். அவரது 210-வது இன்னிங்சில் அவர் 8000 ரன் கடந்தார். இதன்பிறகு மேலும் ஒரு 10000 ரன் அடித்தார் சச்சின். அவரது ஓய்வை 2012-இல் அறிவித்தார்.
சவுரவ் கங்குலி – 200 இன்னிங்ஸ்
முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியை சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாகுடன் சேர்ந்து பல ரன்களை எடுத்துள்ளார் கங்குலி. 2002-இல் அவரது 200வது இன்னிங்ஸ் போது அவர் 8000 ரன் அடித்தார்.
ஏபி டி வில்லியர்ஸ் – 182 இன்னிங்ஸ்
தற்போது கிரிக்கெட்டில் சிறந்த வீரராய் விளங்குகிறார் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ். நேரத்திற்கு தகுந்த விளையாட்டை விளையாடுவர் டி வில்லியர்ஸ். 2017-ஆம் ஆண்டில் அவரது 182-வது இன்னிங்சில் 8000 ரன் கடந்தார் டி வில்லியர்ஸ்.
விராட் கோலி – 175 இன்னிங்ஸ்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருடைய 175வது இன்னிங்சின் போது 8000 ரன் அடித்தார். இந்த மைல்கல்லை 2017-இல் வங்கதேசத்துடன் விளையாடும் போது அடித்தார். சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் 96* ரன் அடித்து, இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி .