இந்திய அணியின் புது பயிற்சியாளர் பதவிக்கு அணில் கும்ப்ளே மாற்று 5 நபர் விண்ணப்பித்துள்ளனர் – விரேந்தர் சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்புட் மற்றும் டோடா கணேஷ். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மெக்டெர்மோட், காலக்கெடுவான ஏப்ரல் 31-க்கு விண்ணப்பித்துள்ளதால், அவரை பேட்டி எடுக்க மாட்டார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் நிர்வாக குழுவில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர், வி.வி.ஸ். லட்சுமண் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் பேட்டி எடுத்து, சாம்பியன்ஸ் டிராபி முடிவதற்கு முன்பு இந்திய அணியின் புது பயிற்சியாளர் யார் என அறிவிப்பார்கள்.
இந்திய அணிக்கு பயிற்சியாளராக சிறப்பாக செயல் பட்டார் அணில் கும்ப்ளே, ஆனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உடைமாற்றும் அணியில் மோதல் ஏற்படுகிறது என தகவல்கள் வந்துள்ளது.
புது பயிற்சியாளர் பதவிக்காக 6 போட்டியாளராகள் இருந்தாலும், ரவி சாஸ்த்ரி தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார் இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்திய அணி இங்கிலாந்து செல்லுவதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் மற்றும் லட்சுமணை நேரில் பார்த்து ரவி சாஸ்த்ரியை விண்ணப்பிக்க கேட்டிருக்கிறார். ஆனால், கடந்த முறை பயிற்சியாளர் பதவியில் இருந்து சாஸ்த்ரியை தூக்கியதால், அவர் விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில் கும்ப்ளே, சேவாக், மூடி, பைபஸ் ஆகியோரை தான் கிரிக்கெட் நிர்வாக குழு பேட்டி எடுக்கும், தேவை பட்டால் ராஜ்புட் மற்றும் கணேஷை அழைப்பார்கள்.
“வியாழக்கிழமை மாலை அல்லது வெள்ளிக்கிழமை அன்று பேட்டி எடுப்பார்கள். அந்த குழு விண்ணப்பதாரர்களை தனித்தனியாகவும் பேட்டி எடுக்கலாம்,” என தகவல் வந்துள்ளது.
கும்ப்ளே விண்ணப்பம் அளிக்க தேவை இல்லை, ஆனால் அவர் விண்ணப்பத்தை அனுப்பி இருக்கிறார்.