பயம் காட்டிய முஸ்தபிசுர்... பேட்டிங்கில் மிரட்டிய அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்; 173 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி !! 1
பயம் காட்டிய முஸ்தபிசுர்… பேட்டிங்கில் மிரட்டிய அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்; 173 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் டி.20 தொடரின் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பயம் காட்டிய முஸ்தபிசுர்... பேட்டிங்கில் மிரட்டிய அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்; 173 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் கேப்டனான டூபிளசிஸ் 23 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான விராட் கோலி 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் மற்றும் ராஜத் படித்தர் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமலும், கேமிரான் க்ரீன் 18 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

பயம் காட்டிய முஸ்தபிசுர்... பேட்டிங்கில் மிரட்டிய அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்; 173 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி !! 3

முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சில் சிக்கி பெங்களூர் அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதன் மூலம் பெங்களூர் அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் கூட்டணி சேர்ந்த அனுஜ் ராவத் – தினேஷ் கார்த்திக் ஜோடி, பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

போட்டியின் கடைசி பந்துவரை பெங்களூர் அணிக்கான தனது பங்களிப்பை ராவத் – தினேஷ் கார்த்திக் மிக சரியாக செய்து கொடுத்தது. தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்களும், அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 173 ரன்கள் எடுத்துள்ளது.

பயம் காட்டிய முஸ்தபிசுர்... பேட்டிங்கில் மிரட்டிய அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்; 173 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி !! 4

பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *