தனி ஆளாக போராடிய விராட் கோலி... கடைசி நேரத்தில் பெங்களூர் அணியை கரை சேர்த்த தினேஷ் கார்த்திக்; மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் !! 1
தனி ஆளாக போராடிய விராட் கோலி… கடைசி நேரத்தில் பெங்களூர் அணியை கரை சேர்த்த தினேஷ் கார்த்திக்; மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தனி ஆளாக போராடிய விராட் கோலி... கடைசி நேரத்தில் பெங்களூர் அணியை கரை சேர்த்த தினேஷ் கார்த்திக்; மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ்(3), கேமிரான் க்ரீன் (3), மேக்ஸ்வெல் (3), ராஜத் படித்தர் (18) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினர். ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்து போட்டியை வெற்றிகரமாக முடிக்க கிடைத்த தவறவிட்டார்.

தனி ஆளாக போராடிய விராட் கோலி... கடைசி நேரத்தில் பெங்களூர் அணியை கரை சேர்த்த தினேஷ் கார்த்திக்; மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் !! 3

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் பேட்டிங்காலும், பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலியும் விக்கெட்டை இழந்துவிட்டதாலும் கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை பெங்களூர் அணி சந்தித்தது.

ஹர்சல் பட்டேல் வீசிய போட்டியின் 19வது ஓவரில் களத்தில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் லம்ரோர் ஆகியோர் 13 ரன்கள் சேர்த்ததால் கடைசி ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை பெங்களூர் அணிக்கு ஏற்பட்டது.

அர்ஸ்தீப் சிங் வீசிய போட்டியின் கடைசி ஓவரை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரும், அதன்பின் ஒரு பவுண்டரியும் அடித்து அசால்டாக போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். இதன் மூலம் 19.2 ஓவரில் இலக்கை எட்டிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *