கனவுல கூட பெங்களூர் டீம எனக்கு பிடிக்காது... வன்மத்தை ஓபனாகவே வெளிப்படுத்திய கவுதம்  கம்பீர் !! 1
கனவுல கூட பெங்களூர் டீம எனக்கு பிடிக்காது… வன்மத்தை ஓபனாகவே வெளிப்படுத்திய கவுதம்  கம்பீர்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்து விடவே கூடாது என்ற எண்ணம் தனக்கு எப்போதும் இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 22ம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான பெங்களூர் – கொல்கத்தா இடையேயான போட்டி இன்று (29-3-24) நடைபெறுகிறது.

கவுதம் கம்பீர் – விராட் கோலி இடையேயான பல வருட மோதல் காரணமாகவே இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கனவுல கூட பெங்களூர் டீம எனக்கு பிடிக்காது... வன்மத்தை ஓபனாகவே வெளிப்படுத்திய கவுதம்  கம்பீர் !! 2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் பெங்களூர் – கொல்கத்தா இடையேயான போட்டி அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையிலான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூர் – கொல்கத்தா இடையேயான போட்டி குறித்து வெளியிடப்பட்டிருக்கும் பிரமோ வீடியோவில் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், “பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துவிட கூடாது என எப்போதும் நான் நினைத்து கொண்டே இருப்பேன். கனவில் கூட பெங்களூர் அணியை வீழ்த்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எப்போதும் இருக்கும். பெங்களூர் அணி இரண்டாவது பெரிய அணி, டிவில்லியர்ஸ், கெய்ல், விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் பெங்களூர் அணியில் இருந்த போதிலும் அவர்களால் இன்னும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை, இருந்தாலும் அனைத்தையும் வென்றவர்கள் போல களத்தில் செயல்படுவார்கள் இதன் காரணமாகவே பெங்களூர் அணியை அனைத்து போட்டியிலும் வீழ்த்த வேண்டும் என கருதுவேன். நான் விளையாடிய போது கொல்கத்தா அணியின் பல சாதனைகள் பெங்களூர் அணிக்கு எதிராக தான் இருக்கும். எனக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதிலும் பெங்களூர் அணியை வீழ்த்த வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கும்” என பேசியுள்ளார். கம்பீரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *