கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்கள் என எங்கு பார்த்தாலும் ஜடேஜா ! ஜடேஜா ! ஜடேஜா ! என ஜடேஜா பெயரே ஒலிக்கிறது . என்னதான் செய்துவிட்டார் ஜடேஜா அப்படி.
ஒருநாள் நல்ல செய்தி , பின் அடுத்த நாளே கெட்ட செய்தி மீண்டும் அடுத்த நாள் நல்ல செய்தி என ஒரெ செய்தி மையங்களில் அடிபட்டு வருகிறார் ஜடேஜா.
தற்போது மீண்டும் ஒரு நற்செய்தியாள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். என்ன செய்தியென்றால் , தற்போது ஜடேஜா தான் கிரிக்கெட் உல்கின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் . சாகிப் அல் ஹாசனை முந்தி தற்போது முதன் முறையாக நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இடம் பிடித்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையேயான இரண்டவது டெஸ்டில் பேட்டிங் , பவுலிங் , ஃபில்டிங் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கிய ஜடேஜா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் 438 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.
இலங்கையை முதல் இன்னிங்சில் தனது பேட்டிங்காள் ஒரு சாத்து சாத்தி 78 ரன்கள் எடுத்து ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் தனது சுழ்ற்ப் பந்து வீச்சால் இலங்கை அணியை சுத்தலில் விட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது போன்ற சிறப்பான் செயல்பாடுகளால் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இடம் பிடித்துள்ளார் ஜடேஜா . அஷ்வினும் அவருக்கு சலைக்காமல் 418 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார் . அஷ்வின் முன்னால் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் ஆவார்.
அதேபோல் இரண்டவது டெஸ்ட்டில் சதம் விளாசிய புஜாரா மற்றும் ரகானே ஆகியோரும் , தரவரிசையில் முன்னெற்றம் கண்டுள்ளனர். புஜாரா பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3 வது இடத்திலும் ரகானே 5வது இடத்திலும் உள்ளனர்.
பவுளர்கள் முஹமது சமி மற்றும் உமேஷ் யாதவும் முன்னேற்றம் கண்டு 20 வது மற்றும் 25 வது இடைத்தை பிடித்துள்ளனர்.