
விராட் கோலி என்றாலே சாதனைகளின் மன்னன் என்றாகிவிட்டது. கடந்த சகாப்தத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் எவ்வாரோ அதே போல் ஒருநாள் போட்டிகளில் சாதனை மேல் சாதனைகளாக செய்து வருகிறார் இந்தியக் கேப்டன் விராட் கோலி.

சாதனைகள் தக்ர்ப்பது முடிந்து, சாதனைகலை குவித்து வருகிறார் விராட். அடுத்தடுத்த போட்டிகளில் ஒவ்வொருமுறை அவர் 30+ ரன் அடிக்கும் போது ஒரு அரை சதம் அல்லது சதம், அடித்துவிகிறார் விராட் கோலி.
இன்று இந்தியா நியூசிலாந்து இடையேயான தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி வழக்கம் போல் அபாரமாக ஆடிவருகிறார்.
இந்த தொடரின் துவக்கத்தில் ஒரு சதம் அடித்து தனது 31 ஆவது சத்தை பூர்த்தி செய்தார். மேலும், தனது 28 வயதிலேயே ரிக்கி பாண்டிங், சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பான்கள் அடித்த சதங்களை கடந்து விட்டார். தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பாவன் சச்சின் டெண்டுகருக்கு (49 சதம்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார் விராட்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் 7ஆவது இடத்திலும் ஒருநாள் போட்டிகளில் 2 புள்ளிகளில் பின்தங்கி இரண்டாவது இடத்திலும், டி20 போட்டிகளில் முதலிடத்திலும் உள்ளார் விராட் கோலி.
தற்போது இந்த போட்டியில் அதிரடியாக் ஆடி வரும் விராட் கோலி, ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 2000 ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் விராட் கோலி. இதுவரை 2012, 2014, 2016, 2017 என நான்கு வருடங்களில் 2000 ரன்னிற்கு மேல் குவித்துள்ளார் விராட் கோலி.
ஒரு வருடத்தில் அதிக முறை 2000 ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல் :
- சச்சின் – 5 முறை (1996, 1998, 2002, 2007, 2011)
- விராட்* – 4 முறை ( 2012, 2014, 2016, 2017 )
- கங்குலி – 4 முறை ( 1997, 1999, 2002, 2007 )
- ட்ராவிட் – 3 முறை (1999, 2002, 2006 )
- சேவாக் – 1 முறை ( 2008 )
- கம்பிர்* – 1 முறை ( 2008 )

இவ்வாறு அடுத்தடுட்து சாதனைகளை படைத்து வருகிறார் விராட் கோலி. தற்போத் இந்த போட்டியிலும் சதம் அடிக்கும் பட்சத்தில் மேலும் சில சாதனைகளை விராட் கோலி படைக்க வாய்ப்புகள் வரும். தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து வருகின்றனர். ரோகித் சர்மா சதம் அடித்து 147 ரானில் தனது விக்கெட்டை இழந்துவிட்டார். 138 பந்தில் 147 ரன்னுடன் 18 ஃபோர்களும் 2 சிக்சர்களும் இந்த ஆட்டத்தில் அடங்கும். விராட் தனது 32ஆவது ஒரு நாள் சதத்தை நோக்க்கு சென்றுகொண்டிருக்கிறார்.