அவுங்களும் மனுசங்க தான்... ரோபோ இல்லை; இந்தியாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இங்கிலாந்திற்கு ஆதரவாக பேசிய அலெய்ஸ்டர் குக் !! 1
அவுங்களும் மனுசங்க தான்… ரோபோ இல்லை; இந்தியாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இங்கிலாந்திற்கு ஆதரவாக பேசிய அலெய்ஸ்டர் குக்

முன்னாள் இங்கிலாந்து வீரரான அலெய்ஸ்டர் குக், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் நம்ப முடியாத அளவிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து வந்த இங்கிலாந்து அணி, இந்திய அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக படுதோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

அவுங்களும் மனுசங்க தான்... ரோபோ இல்லை; இந்தியாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இங்கிலாந்திற்கு ஆதரவாக பேசிய அலெய்ஸ்டர் குக் !! 2

இந்திய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடனே தொடரை துவங்கியது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று போட்டியிலும் இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அருகில் கூட நெருங்க விடாத அளவிற்கு, இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தி டெஸ்ட் தொடரையும் கெத்தாக கைப்பற்றியது.

இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியின் மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையே ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் சிலரே இங்கிலாந்து அணியை மிக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரரான அலெய்ஸ்டர் குக், இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவுங்களும் மனுசங்க தான்... ரோபோ இல்லை; இந்தியாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இங்கிலாந்திற்கு ஆதரவாக பேசிய அலெய்ஸ்டர் குக் !! 3

இது குறித்து அலெய்ஸ்டர் குக் பேசுகையில், “இங்கிலாந்து அணி மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருவது உண்மை தான், அவர்களின் விளையாட்டிற்கு நான் ஆதரவாக பேச விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மீதான அழுத்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக அவர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய அணிக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரும் சவாலான தொடர் தான். இரண்டு மாத காலம் சொந்த நாட்டை விட்டு வெளியில் இருப்பது சாதரண விசயம் இல்லை, இது அவர்களுக்கு மனரீதியான சோர்வை கொடுத்திருக்கும். அவர்களும் மனிதர்கள் தான், ரோபோ இல்லை, எனவே அவர்களது நிலைமையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *