ரவி சாஸ்திரி சம்மதத்துடன் தான் டிராவிட் மற்றும் சாஹீர் கான் நியமிக்க பட்டார்கள் 1

ரவி சாஸ்த்திரியை தலைமை பயிற்சியாளராக நியமித்த பின்பு அவரிடம் ஆலோசனை கேட்டு தான் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்க பட்டார் பிறகு ரவி சாஸ்த்திரி கூறிய பிறகு தான் பந்து வீச்சு பயிற்சியாளராக சாஹீர் கானும் நியமிக்க பட்டார்.

CAC குழுவில் சச்சின் கங்குலி மற்றும் விவிஸ் லக்ஷ்மன் தான் இந்த முடிவுகளை பற்றி ரவி சாஸ்திரி இடம் கூறினார்கள்.

கோஹ்லியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் ரவி சாஸ்திரி நியமிக்க பட்டார் என்று கங்குலி கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் இயக்குனரும் ஆனா ரவி சாஸ்திரி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பட்டு உள்ளார்.

தற்போது கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் ரவி சாஸ்திரியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

அணில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு தற்போது அந்த இடத்துக்கு ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Cricket, Ravi Shastri, India, BCCI, Virat Kohli

 

பிசிசிஐ கூறியது :

“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தேர்வு செய்வதற்கு மிகவும் விருப்பமாக ஒப்புக்கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) உறுப்பினர்களுக்கு அதன் நன்றியுணர்வை தெரிவித்துள்ளது.” என்று பிசிசிஐ கூறியது.

“குழுவின் மூன்று உறுப்பினர்கள் – திரு. சவுரவ் கங்குலி, திரு. சச்சின் டெண்டுல்கர் மற்றும் திரு. வி.வி.எஸ். லக்ஸ்மன் ஆகியோர் – இந்திய கிரிக்கெட்டிற்கு மொத்த வெளிப்படைத்தன்மை, தொழில்முறை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை அளித்தனர்.”

விண்ணப்பித்த வீரர்கள் :

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, விரேந்தர் சேவாக்,பில் சிம்மன்ஸ், லால் சந்த் ராஜ்புட், டாம் மூடி மற்றும் ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தார்கள்.

தற்போது இந்தியா இலங்கை அணிகள் மொத உள்ளது இந்த தொடரில் ரவி சாஸ்திரி தான் அணியை மிகவும் வலிமையுடன் கொண்டு செல்ல உள்ளார். சாஹீர் கானும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாக செயல் பட அனைத்து பயிற்சிகளையும் அளிக்க உள்ளார்.

இந்தியா இலங்கை அணிகள் மோதும் போட்டி இந்த மாதம் ஜூலை 26ஆம் தேதியில் இருந்து துடங்கிக்கிறது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *