இந்தியா – இலங்கை விளையாடிய மூன்றாவது போட்டியின் இடையிலே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது என்று கேட்கும் போது, 1996 உலகக்கோப்பை இந்தியா – இலங்கை போட்டி தான் ஞாபகம் வரும். இப்போது, போட்டியை நடுவில் நிறுத்திய ஐந்து தருணங்களை பார்ப்போம்.
இந்தியா vs இலங்கை, 2017
இந்தியா – இலங்கைக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 8 ரன் அடித்தால் இந்திய அணி வெற்றி என்ற நிலையில் இருக்கும் போது, இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து, மீண்டும் போட்டி தொடங்கியதும், இந்திய அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 1961
1961இல் வெஸ்ட் இண்டீசில் இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டியை பார்க்க 30000 பேர் வந்திருந்தார்கள். அப்போது, அதுதான் சாதனை.
இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்கமுடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி, 45 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது,வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கட்டுப்படைந்தனர். சிறிது நேரத்தில், மற்றொரு விக்கெட்டும் விழுந்தது. இதனால், கோபமடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டீல்களை மைதானத்தில் எறிந்தனர். இதனால், 3வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஆஷஸ், 1975
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்ற ஆஸ்திரேலியா அணி, 1 – 0 என்ற கணக்கில் இருந்தார்கள். ஆனால், அவர்களால் 2 – 0 என்ற நிலையை தொடமுடியவில்லை.
கடைசி நாளில், கையில் 7 விக்கெட் இருக்க, ஆஸ்திரேலியாவுக்கு 275 ரன்கள் தேவைபட்டது. ஆனால், ரசிகர்கள் மைதானத்தில் குழி தோண்டிவிட்டார்கள். இதனால், ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெறவில்லை. ஆதலால், அந்த டெஸ்ட் போட்டி சாமானில் முடிந்தது.
இந்தியா vs இலங்கை, 1996
1996 உலகக்கோப்பை இறுதி போட்டியில் நடந்தது அனைவர்க்கும் தெரியும். இலங்கை அணியின் 251 ரன்னை சேஸ் செய்த இந்தியா, 98 – 2 என்ற நிலையில் இருந்தது. ஆனால், சச்சின் விக்கெட் போனதும், இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் நொறுங்கினார்கள். இதனால் கடுப்படைந்த இந்திய ரசிகர்கள், மைதானத்தில் பாட்டீல்களை வீசினார்கள். இந்த சம்பவம் நடந்ததால், இலங்கை அணிக்கு வெற்றியை கொடுத்தது ஐசிசி.
இந்தியா vs பாகிஸ்தான், 1999
1999 ஆசியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி, அக்தரின் வேகத்தில் சரிந்தார். இதனால், கோபமடைந்த இந்திய ரசிகர்கள், நான்காவது நாள் மதியம் எதிர்ப்பில் ஈடுபட்டார்கள். 231-9 நிலையில் இருந்த இந்திய அணி, ஒரு விக்கெட் கொடுத்தால் தோல்வி. மீண்டும் போட்டி தொடங்கியதும், 1 விக்கெட்டை எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த எதிர்ப்பில், அந்த மைதானத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.