ரொம்ப ஈசியா ஜெயிச்சிடுவோம்னு நினைச்சோம்... ஆனா இந்த ஒரு விசயம் எல்லாத்தையும் மாத்திடுச்சு; தோல்விக்கான காரணத்தை கூறிய பென் ஸ்டோக்ஸ் !! 1
ரொம்ப ஈசியா ஜெயிச்சிடுவோம்னு நினைச்சோம்… ஆனா இந்த ஒரு விசயம் எல்லாத்தையும் மாத்திடுச்சு; தோல்விக்கான காரணத்தை கூறிய பென் ஸ்டோக்ஸ்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.

ரொம்ப ஈசியா ஜெயிச்சிடுவோம்னு நினைச்சோம்... ஆனா இந்த ஒரு விசயம் எல்லாத்தையும் மாத்திடுச்சு; தோல்விக்கான காரணத்தை கூறிய பென் ஸ்டோக்ஸ் !! 2

முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில், பந்துவீச்சில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரிலும் சமநிலையை அடைந்துள்ளது.

இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், இந்திய வீரரான பும்ராஹ்வை பாராட்டி பேசியுள்ளார்.

ரொம்ப ஈசியா ஜெயிச்சிடுவோம்னு நினைச்சோம்... ஆனா இந்த ஒரு விசயம் எல்லாத்தையும் மாத்திடுச்சு; தோல்விக்கான காரணத்தை கூறிய பென் ஸ்டோக்ஸ் !! 3

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “முதல் போட்டியின் மூலம் எங்களுக்கு கிடைத்த நம்பிக்கையால், எங்களால் இந்த இலக்கை இலகுவாக எட்ட முடியும் என்றே நினைத்தோம். இந்த போட்டி அதிக அழுத்தம் நிறைந்த போட்டியாக இருந்தது. அழுத்தம் காரணமாகவே எங்களது சில முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டனர். எங்கள் அணியில் இருப்பவர்கள் திறமையான வீரர்கள் என்பதால் யாருக்கும் எந்த உபதேசமும் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கடினமான சூழ்நிலைகளயும், தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர முடியும் என்பதும் எங்களது வீரர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆண்டர்சன் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டார், அதே போன்று தான் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்வும் மிக சிறப்பாக செயல்பட்டார். பும்ராஹ்வை போன்ற ஒருவர் எதிரணியாக இருந்தாலும் அவரது திறமையையும், பந்துவீச்சு ஸ்டலையும் பாராட்டாமல் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *