பயப்படவே வேணாம்... அடுத்த 4 போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி உறுதி; முன்னாள் வீரர் நம்பிக்கை !! 1
பயப்படவே வேணாம்… அடுத்த 4 போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி உறுதி; முன்னாள் வீரர் நம்பிக்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணியே கைப்பற்றும் என முன்னாள் இந்திய வீரரான சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

பயப்படவே வேணாம்... அடுத்த 4 போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி உறுதி; முன்னாள் வீரர் நம்பிக்கை !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணம் மைதானத்தில் 2ம் தேதி துவங்க உள்ளது.

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு எஞ்சியுள்ள போட்டிகளும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என முன்னாள் இந்திய வீரரான சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

பயப்படவே வேணாம்... அடுத்த 4 போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி உறுதி; முன்னாள் வீரர் நம்பிக்கை !! 3

இது குறித்து சேத்தன் சர்மா பேசுகையில், “எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்பதே எனது கருத்து. நமது நாட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை முதல் போட்டியின் மூலம் நல்ல முறையில் வரவேற்துவிட்டோம் என நினைத்து கொண்டு, இந்திய வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் இது போன்று தவறுகள் நடப்பது இயல்பு தான். முதல் போட்டியில் இந்திய அணி பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை, இந்திய அணி மிக சிறப்பாகவே விளையாடியது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்திருந்தது, ஆனால் அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதே போன்று தான் இப்போதும் நடக்கும் என நான் கருதுகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணியே வெல்லும். எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் அளவிற்கு இந்திய அணி வலுவானதாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *