எல்லா பிளானும் இப்ப பக்காவா இருக்கு... டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் தெளிவா சொல்லிட்டங்க; இங்கிலாந்து அணியை எச்சரித்த கே.எஸ் பாரத் !! 1
எல்லா பிளானும் இப்ப பக்காவா இருக்கு… டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் தெளிவா சொல்லிட்டங்க; இங்கிலாந்து அணியை எச்சரித்த கே.எஸ் பாரத்

முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், இரண்டாவது போட்டியை எவ்வித பயமும் இல்லாமல் இந்திய அணி எதிர்கொள்ளும் என இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கே.எஸ் பாரத் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

எல்லா பிளானும் இப்ப பக்காவா இருக்கு... டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் தெளிவா சொல்லிட்டங்க; இங்கிலாந்து அணியை எச்சரித்த கே.எஸ் பாரத் !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்த போட்டியையும் கடும் நெருக்கடியுடன் தான் எதிர்கொள்ளும் என முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வரும் நிலையில், தங்கள் மீது எவ்வித அழுத்தமும் இல்லை என இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கே.எஸ் பாரத் தெரிவித்துள்ளார்.

எல்லா பிளானும் இப்ப பக்காவா இருக்கு... டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் தெளிவா சொல்லிட்டங்க; இங்கிலாந்து அணியை எச்சரித்த கே.எஸ் பாரத் !! 3

இது குறித்து கே.எஸ் பாரத் பேசுகையில், “முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வர எங்களால் முடியும். முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்த போட்டியை எவ்வித நெருக்கடியும் இல்லாமல் எதிர்கொள்வோம். முதல் டெஸ்ட் போட்டியில் ஓலி போப் மிக சிறப்பாக விளையடினார். ஓலி போப் அடித்த சில ஸ்வீப் ஷாட்கள் எங்களுக்கே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு முழு தகுதியான அணி தான். எங்களால் நிச்சயமாக தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும்” என்று தெரிவித்தார்.

எல்லா பிளானும் இப்ப பக்காவா இருக்கு... டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் தெளிவா சொல்லிட்டங்க; இங்கிலாந்து அணியை எச்சரித்த கே.எஸ் பாரத் !! 4

மேலும் பேசிய பாரத், “முதல் போட்டியின் முடிவிற்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எங்களை கூலாக இருக்கவே வலியுறுத்தினார்கள். எஞ்சியுள்ள போட்டியை நினைத்து பயம் கொள்ள தேவையே இல்லை என்றே அறிவுறுத்தினார்கள். நாங்கள் இதுபோன்ற பல சவாலான தொடர்களை சந்தித்துள்ளோம். நாங்கள் எங்களது தனிப்பட்ட விளையாட்டில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்றே எங்களை வழியுறுத்தினார்கள். வெற்றி, தோல்வி என்பதை தாண்டி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தான் எங்களது கவனத்தை செலுத்தி வருகிறோம். எவ்வித அழுத்தமும் இல்லாமல் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *