இந்திய அணி தேர்வாளரின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், யுவராஜ் சிங்கை நீக்க வில்லை அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம் என கூறியவுடன், மீண்டும் ஒரு செய்தியுடன் வந்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் ஜூனியர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்ப்படாத ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிகளுக்காக கருதவில்லை. ஆனால், டி20 போட்டிகளுக்கு அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என பிரசாத் கூறினார்.
அவருடையது அரிதான திறமை, அவருடைய பல பெரிய ஷாட்கள் அவரை அதிரடி வீரராக மாற்றியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக செயல் பட்டார் மற்றும் ஒரு இளம் வீரர் எப்படி விளையாடவேண்டும் என்றும் அவர் காண்பித்தார். அவருக்கு இந்திய அளவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் கண்டிப்பாக அவருக்கு டி20 போட்டிகளில் மேலும் வாய்ப்பு கிடைக்கும்.
“எதிர்பார்த்து கொண்டிருக்கும் வீரர்களில் ரிஷப் பண்ட் ஒருவர். தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவர் சோபிக்கவில்லை. டி20 போட்டிகளில் அவரை எதிர்பார்க்கின்றோம்,” என பிரசாத் கூறினார்.
மேலும், ஜூனியர் அளவில் இருந்து இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பவர்கள் அனைவரும் முடிக்கப்பட்ட தயாரிப்பு தான், அதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என கூறினார் பிரசாத். “ஜூனியர் அளவில் இருந்து இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பவர்கள் அனைவரும் முடிக்கப்பட்ட தயாரிப்பு தான், ஹர்டிக் பாண்டியா போன்ற வீரர்கள், அதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான்,” என பிரசாத் தெரிவித்தார்.
ஹர்டிக் பாண்டியா, இந்திய அணிக்கு கிடைத்த அரியவகை திறமை வாய்ந்தவர். சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில், அனைவரும் கீழே வீழ்ந்த பிறகு, நான் இருக்கிறேன் என இந்திய ரசிகர்களை ஊக்க படுத்தினார். ஆனால், ஜடேஜா செய்த அந்த ஒரு தவறினால், இந்திய அணியே கீழே விழுந்தது.
இலங்கை அணிக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் ஹர்டிக் பாண்டியா. இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பாண்டியா, 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் என விளாசி தள்ளினார்.