பேசுறவன் பேசட்டும்... நாங்க எதையுமே மாத்திக்க போறது இல்ல; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஓலி போப் !! 1
பேசுறவன் பேசட்டும்… நாங்க எதையுமே மாத்திக்க போறது இல்ல; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஓலி போப்

இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியை புத்துணர்சியுடன் எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தயாராக இருப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஓலி போப் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

பேசுறவன் பேசட்டும்... நாங்க எதையுமே மாத்திக்க போறது இல்ல; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஓலி போப் !! 2

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி 23ம் தேதி ராஞ்சி மைதானத்தில் துவங்க உள்ளது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஓலி போப், கடந்த போட்டியில் சந்தித்த படுதோல்வியை மறந்துவிட்டு புத்துணர்சியுடன் நான்காவது போட்டியை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பேசுறவன் பேசட்டும்... நாங்க எதையுமே மாத்திக்க போறது இல்ல; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஓலி போப் !! 3

இது குறித்து ஓலி போப் பேசுகையில், “அடுத்த போட்டியில் பும்ராஹ்வை இந்திய அணி நிச்சயமாக மிஸ் செய்யும் என கருதுகிறேன், ஆனால் முகமது சிராஜ் போன்ற வீரர்களும் மிக சிறப்பாக பந்துவீசி வருகின்றனர், அதனால் எங்களது விளையாட்டு அனுகுமுறையிலும் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த போட்டியில் தோல்வியடைந்திருப்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து எங்களது வியூகங்களையும், அதிரடி பேட்டிங்கையும் கைவிட்டு விட மாட்டோம். ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.ஆனால் கடந்த போட்டியில் நடந்ததை பற்றி பெரிதாக யோசிக்காமல் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம். எங்கள் வீரர்கள் புத்துணர்சியுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். தவறுகளை சரி செய்து அடுத்த போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடுவோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *