ரொம்ப சுயநலமா இருக்காரு... சுயநலம் மட்டும் இல்லேனா அஸ்வின் தான் இப்ப “நம்பர் 1”... பகிரங்கமாக பேசிய முன்னாள் வீரர் !! 1
ரொம்ப சுயநலமா இருக்காரு… சுயநலம் மட்டும் இல்லேனா அஸ்வின் தான் இப்ப “நம்பர் 1”… பகிரங்கமாக பேசிய முன்னாள் வீரர்

இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வின் தனது தனிப்பட்ட சாதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ரொம்ப சுயநலமா இருக்காரு... சுயநலம் மட்டும் இல்லேனா அஸ்வின் தான் இப்ப “நம்பர் 1”... பகிரங்கமாக பேசிய முன்னாள் வீரர் !! 2

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினின் பங்களிப்பு இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகள் என அஸ்வின் நடப்பு தொடரில் இதுவரை 9 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாலும், ரவிச்சந்திர அஸ்வின் சாதனைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ரொம்ப சுயநலமா இருக்காரு... சுயநலம் மட்டும் இல்லேனா அஸ்வின் தான் இப்ப “நம்பர் 1”... பகிரங்கமாக பேசிய முன்னாள் வீரர் !! 3

இது குறித்து கெவின் பீட்டர்சன் பேசுகையில், “ரவிச்சந்திர அஸ்வின் மிக சிறந்த பந்துவீச்சாளர், ஆனால் அவர் சமீபகாலமாக தனிப்பட்ட சாதனைகள் மீது அதிக கவனம் செலுத்துவதாக நான் கருதுகிறேன். தனிப்பட்ட சாதனைகள் மீது கவனம் செலுத்துவதால் தான் அவரால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. சாதனைகள் மீதான கவனமும், அழுத்தமும் இல்லையெனில் அவரால் இன்னும் மிக சிறப்பாக பந்துவீச முடியும். அதே போல் அதிக ஆபத்தான பந்துவீச்சாளராகவும் ரவிச்சந்திர அஸ்வினால் இருக்க முடியும். மேலும் அஸ்வின் வலுது கை பேட்ஸ்மேன்களுக்கான தனது பந்துவீச்சு வியூகத்தையும் மாற்றி கொள்ள வேண்டும், அதில் சில தவறுகள் செய்கிறார்” என்று தெரிவித்தார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *