இங்கிலாந்துடன் ஆட இருக்கும் இந்திய அணி குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது பிளேயிங் லெவெனில் ஹார்திக் பாண்டியாவிற்கு இடம் என தெரிவித்துள்ளார்.
விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. இதில் டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.
இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள ஆகாஹ் சோப்ரா, தற்போது உள்ளுர் போட்டிகளின் பயிற்சியாளராகவும், முழு நேர கமென்டரியும் செய்து வருகிறார். மேலும் இவர் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணியில் சிறந்த பிளேயிங் லெவேன் வீரர்கள் யார் என்பதையும், இவர்கள் ஆடினால் எளிதில் தொடரை வெல்லலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது பிளேயிங் லெவெனில் ஹார்திக் பாண்டியாவிற்கு இடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஹார்திக் பாண்டியா ஆடிய ஆட்டங்களில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அடித்த 93 ரன்கள் ஆடமே சிறப்பாக இருந்தது. மற்ற எதிலும் கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தியதே இல்லை.

தென்னாபிரிக்கா தொடரில் 5 போட்டிகளில் மீதம் உள்ள 4 போட்டிகளில் முறையே 1, 15, 6, 0 சொற்ப ரன்களில் வெளியேறினார். மேலும் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
மேலும், ஹார்திக் பாண்டியாவினால் அதிக பட்சம் 17 முதல் 18 ஓவர்கள் மட்டுமே வீச முடியும். இது 5 நாட்கள் கொண்ட போட்டியில் போதவே போதாது. இவர்களுக்கு பதிலாக சமி, இஷாந்த், உமேஷ், பும்ரா, புவனேஸ்வர் இவர்களில் ஓருவரை அணியில் சேர்க்கலாம், இங்கிலாந்து மைதானங்கள் வேக பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.