ஒருநாள் போட்டிகள் துவங்கி இன்று வரை 46 வருடங்கள் ஆகிறது. 1971ல் இருந்து ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. இந்த பட்டிய்லைப் பார்த்தால் துவங்கிய காலகட்டங்களில் சிக்சர் அடிக்க தங்கினர் என்று தான் கூறவேண்டும். கிட்டத்தட்ட பட்டியலில் இருக்கும் முதல் 10 பேர் 90களில் ஆடிய வீரர்களே. அப்போதைய காலகட்டத்தில் சிக்சர் அடிக்கவே வீரர்கள் யோசித்து வந்திருக்கின்றனர். கிரிக்கெட் என்றாலே மிய மெதுவாக ஆடி ரன் சேர்க்கும் ஒரு விளையாட்டு என்ற மாயை அவர்களிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 1975ல் நடந்த முதல் ஒருநாள் உலகக்கோப்பையில் 174 பந்துகளுக்கு 36 ரன் மட்டுமே அடித்து இந்திய அணிக்கு தோல்வியை தேடித்தந்தது ஒரு கதை.
தற்போது, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்துள்ள முதல் 10 வீரர்களைப் பார்ப்போம். இந்த பட்டியளில் 4 இந்திய வீரர்கள் உள்ளனர். ரோகித் சர்மா 146 சிக்சர்களுடன் 14ஆவது இடத்தியல் உள்ளார்.
(குறிப்பு.1 : புள்ளி விவரங்கள் அனைத்தும் அக்.19ன் படி பெறப்பட்டது,
குறிப்பு.2 : * இடப்பட்ட வீரர்கள் இன்னும் ஒருநாள் போட்டிகள் ஆடிக் கொண்டிருப்பவர்கள்)
10.யுவராஜ் சிங்* (2000 – 2017) – 155 சிக்சர்கள்
இந்தியாவின் சிக்சர் மன்னன் யுவராஜ் சிங். தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்சர்களைப் பறக்கவிட்டு பிலின்டாப் அன்ட் கோவை கதிகலங்கச் செய்தவர். இவர் ஒருநாள் சிக்சர் பட்டியலில் இருப்பது ஆச்சரியம் இல்லை. 304 ஒருநாள் போட்டிகளில் 278 ஆட்டத்தில் அவர் அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை 155. கித்தட்ட 17 வருடங்களாக தனது 18 வயதில் இருந்து இந்திய அணிக்காக அடி வருகிறார் யுவராஜ் சிங்.
- ஆட்டம் (Innings) – 278
- ரன் – 8701
- அதிகபட்ச ரன் -150
- 50கள் – 52
- 100கள் – 14
- ஃபோர்கள் – 908
- சிக்சர்கள்- 155
- சிக்ஸ் பெர் இன்னிங்ஸ் – 0.55 சிக்சர்