8.சௌரவ் கங்குலி (1992-2007) – 190 சிக்சர்கள்
இந்திய அணியின் அதி சிறந்த கேப்டன்களில் ஒருவர் சௌரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணி சூதாட்ட புகாரில் சிக்கிய போது அணிக்கு புத்துணர்ச்சி ஊட்டி அணியை மீட்டெடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர். ஒரு இடது ஆட்டக்காரர் சிக்சர் எப்படி அடிக்க வேண்டும் என்று இந்திய அணிக்கு அறிமுகப்படுத்தியவர். ஒரு கட்டத்தில் அதிகபட்ச ரன்களில் சச்சின் டெண்டுகளை நெருகிங்கிய கங்குலி பின்னர் பயிற்சியாளருடன் ஏற்ப்பட்ட சர்ச்சை காரணமாக அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். உலக கிரிக்கெட்டில் 10000 ரன்னிற்கு மேல் அடித்த வீரர்களில் ஒருவர் சௌரவ் கங்குலி. 311 ஆட்டங்களில் 190 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
- ஆட்டம் (Innings) – 311
- ரன் – 11363
- அதிகபட்ச ரன் -183
- 50கள் – 72
- 100கள் – 22
- ஃபோர்கள் – 1122
- சிக்சர்கள் – 190
- ஒரு ஆட்டத்திற்கு – 0.610 சிக்சர்