சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஆஸ்திரேலிய அணி... சொதப்பிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு !! 1
சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஆஸ்திரேலிய அணி… சொதப்பிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஆஸ்திரேலிய அணி... சொதப்பிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தபின் களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயர் வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி கொடுத்தார்.

சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஆஸ்திரேலிய அணி... சொதப்பிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு !! 3

ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால், விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

பொறுமையான அதே சமயத்தில் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 54 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். தனி ஆளாக போராடி இந்திய அணியை கரை சேர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் பொறுமையாக விளையாடி 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்துவிட்டு, அடித்து விளையாட வேண்டிய நேரம் வரும் போது விக்கெட்டை இழந்தார்.

சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஆஸ்திரேலிய அணி... சொதப்பிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு !! 4

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன சூர்யகுமார் யாதவும் இந்த போட்டியில் கடுமையாக திணறி வெறும் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 240 ரன்கள் எடுத்த இந்திய அணி கடைசி பந்தில் ஆல் அவுட்டானது.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *