நாங்க செஞ்ச தப்புக்கு சரியான தண்டனை கிடைச்சிருச்சு... தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ஷிகர் தவான் வேதனை !! 1
நாங்க செஞ்ச தப்புக்கு சரியான தண்டனை கிடைச்சிருச்சு… தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ஷிகர் தவான் வேதனை

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் கேட்ச்சை தவறவிட்டதே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

17வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்தன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.

நாங்க செஞ்ச தப்புக்கு சரியான தண்டனை கிடைச்சிருச்சு... தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ஷிகர் தவான் வேதனை !! 2

 

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு மேக்ஸ்வெல், டூபிளசிஸ் போன்ற சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தாலும், விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங்காலும், கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் லம்ரோரின் அதிரடி ஆட்டத்தாலும் 19.2வது ஓவரில் இலக்கை எட்டிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷிகர் தவான், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதற்கு தங்களுக்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நாங்க செஞ்ச தப்புக்கு சரியான தண்டனை கிடைச்சிருச்சு... தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ஷிகர் தவான் வேதனை !! 3

இது குறித்து ஷிகர் தவான் பேசுகையில், “பெங்களூர் அணியுடனான இந்த போட்டி மிக சிறப்பானது. போட்டியை எங்கள் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தபோதிலும் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நாங்கள் பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதல் 6 ஓவர்களில் நானும் நிதானமாக விளையாடிவிட்டேன், நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது. விராட் கோலி போன்ற ஒரு சிறந்த வீரரிடம் வரும் கேட்சை தவறவிட்டுவிட்டாலும், இது போன்ற தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். நாங்கள் அந்த கேட்சை பிடித்திருந்தால் போட்டியின் முடிவும் எங்களுக்கு சாதகமாக அமைத்திருக்கலாம். நான் இந்த போட்டியில் நல்ல ரன்கள் குவித்திருந்தாலும், இன்னும் சற்று அதிரடியாக விளையாடி கூடுதலாக ரன் சேர்த்திருக்க வேண்டும். அடுத்தடுத்து சில முக்கிய விக்கெட்டுகளை இழந்ததும் எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிட்டது. தவறுகளை சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *