வீடியோ; இது தான் தலைவன் ஸ்டைல்... கடைசி பந்திலும் கூலாக ரன் அவுட் செய்து வரலாறும் படைத்த தல தோனி !! 1
வீடியோ; இது தான் தலைவன் ஸ்டைல்… கடைசி பந்திலும் கூலாக ரன் அவுட் செய்து வரலாறும் படைத்த தல தோனி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளார்.

17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன.

வீடியோ; இது தான் தலைவன் ஸ்டைல்... கடைசி பந்திலும் கூலாக ரன் அவுட் செய்து வரலாறும் படைத்த தல தோனி !! 2

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு மேக்ஸ்வெல் (0), ராஜத் படித்தர் (0) உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அனுஜ் ராவத் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும், பெங்களூர் அணிக்கு அதிரடியான துவக்கம் அமைத்து கொடுத்த டூபிளசிஸ் 35 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 173 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தில் அனுஜ் ராவத்தை தோனி ரன் அவுட் செய்த வீடியோ இங்கே;

வழக்கம் போல் இந்த போட்டியிலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்ட தல தோனி, இந்த போட்டியின் மூலம் புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளார். 20வது ஓவரின் கடைசி பந்தில் கூலாக அனுஜ் ராவத்தை ரன் அவுட் செய்த தோனி, இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அவுட்டிற்கு காரணமான வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அவுட்டிற்கு காரணமான வீரர்கள் பட்டியல்;

தோனி – 24 முறை

ரவீந்திர ஜடேஜா – 23 முறை

விராட் கோலி – 19 முறை

சுரேஷ் ரெய்னா – 16 முறை

மணிஷ் பாண்டே – 16 முறை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *