Cricket, India, Sri Lanka, Virat Kohli, Sourav Ganguly, Sachin Tendulkar

டெஸ்ட் போட்டிகளில் கங்குலியின் சதம், சாதனையை முந்தினார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம், கோஹ்லி இந்த சாதனையை படைத்துள்ளார்.

காலே நகரில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 133 பந்துகளில் சதமடித்த கோஹ்லி 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் இந்தியா தனது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

கோஹ்லி முந்தினார்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லிக்கு இது 17ஆவது சதமாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் அடித்திருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, கோஹ்லி முந்தியுள்ளார்.

லட்சுமணன் சாதனை சமன்

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்கள் அடித்திருக்கும் திலிப் வெங்சர்க்கார் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோரின் சாதனைகளை கோஹ்லி சமன் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினுக்குத்தான் முதலிடம்.

சச்சினுக்கு முதலிடம்

கங்குலி சாதனையை முந்தினார் கோஹ்லி! 1

கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளிலும் சளைத்தவர் கிடையாது. 49 சதங்கள் விளாசி அசத்தியவர் சச்சின்.

டிராவிட்டிற்கு இரண்டாவது இடம்

Cricket, India, BCCI, Rahul Dravid, Ravi Shastri

சச்சினுக்கு அடுத்த இடத்தில் 36 சதங்களுடன் ராகுல் டிராவிட் உள்ளார். பழம் பெரும் கிரிக்கெட் வீரர் என வர்ணிக்கப்படும் சுனில் கவாஸ்கர் 34 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். அதிரடி வீரர் சேவாக் 23 சதங்கள் விளாசியுள்ளார். முகமது அசாருதின் 22 சதங்கள் விளாசியுள்ளார்.

கேப்டனாக சாதனை

Cricket, Virat Kohli, India, Sri Lanka

கேப்டனாக பதவியேற்ற பிறகு கோஹ்லி 10 சதங்களைப் பதிவு செய்துள்ளார். கேப்டனாக சுனில் கவாஸ்கர் 9 சதங்கள் விளாசிய சாதனையையும் இதன் மூலம் கோஹ்லி முறியடித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *