பந்து வீச்சாளாகர் பட்டியளில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் உடனான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அசத்தியதன் மூலம் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
35 வயதான அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த பந்துவீச்சில் நேற்று 7 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி 12 புள்ளிகள் அதிகத்துடன் முதல் இடம் பிடித்துள்ளார்.

3வது இடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் 4ஆவது இடத்தை இலங்கையின் ரங்கனா ஹெராத்தும் பிடித்துள்ளனர்.
அதே போல் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சாளர்கள் பட்டியளில் 21ஆவது இடத்தையும், ஆல் ரவுண்டர் பட்டியளில் 20ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

பேட்டிங்கில், இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா 4ஆவது இடத்திலும்,
கேப்டன் விராத் கோலி 6ஆவது இடத்திலும், இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 9ஆவது இடத்திலும், அஜிங்க்யா ரகானே 10ஆவது இடத்திலும் உள்ளனர்.